0
வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார்.
யாழ்., சாவகச்சேரி – கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் வீதியின் வளைவில் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி காயமடைந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.