அமெரிக்காவில் உள்ள முக்கிய 30 நகரங்களுடன் கைலாசா சார்பில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த நகரங்களின் மேயர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.
இவ்வாறு தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் சற்று அமைதியாக இருந்த நித்யானந்தா தரப்பினர்.மீண்டும் சமூக வலைத்தளங்களில் கைலாசா பற்றிய பெருமை பேசப்படுகிறது.
ரஞ்சிதா கைலாசா நாட்டின் பிரதமராகி விட்டார், அவர் முக்கிய பொறுப்பில் இருந்து நாட்டை கவனித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை அதிகரிக்க செய்தன.
அதேநேரம் எங்கே இருக்கிறது? என தெரியாத ஒரு நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்படுகின்றனர் என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார்.
அதன்படி, ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில்கள் அளித்து பேசி வருகிறார். அவ்வாறு அவர் பேசிய வீடியோக்கள் யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. கைலாசா என்றால் என்ன? என்பது பற்றியும், நித்யானந்தா பற்றியும் அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.