இன்று இந்தியவின் கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் ஒன்றில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.