ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக இருப்பதால் அவரால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேசி வருகின்றார்.
இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதை அமுல்படுத்துவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். 13 ஐ அமுல்படுத்துவதற்கான யோசனையைக் கட்சிகளிடம் இருந்தும் அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், 13 ஐ அமுல்படுத்துவதற்கான அதிகாரம் ரணிலிடம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.