கொழும்பு, மட்டக்குளியில் குழு மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்குளி – பர்கியூசன் வீதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சில குழுக்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் இனவாத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மோதலில் மேலும் சில இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதி, குறித்த பகுதிக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.