யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – பட்டித்திடல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை இராசலிங்கம் (வயது 69) என்பவரே சாவடைந்துள்ளார்.
வீட்டை அண்மித்த பகுதியில் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தபோது அந்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.