13
மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தநாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அதே போல நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் மற்றும் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர்.