இந்திய பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கியது.
இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பேசினார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் நீண்ட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களவை தொடங்கியதும், சில உறுப்பினர் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய சபாநாயகர் ஒம் பிர்லா பேசி வருகிறார்.