உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்ரேலியா, அணியும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதியுள்ளன.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்த போட்டி தற்போது நடைபெறுகிறது.
இரண்டு அணியும் கடந்த 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய அணிகளுடன் மோதியபோது தோல்வி கண்டுள்ளது.
அதுபோல இலங்கை அணி, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. எனவே, எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 209 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஆஸ்ரேலியா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ஆடம் ஷாம்பா 4 விக்கெட்களும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
அடுத்ததாக 210 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்ரேலியா அணி களமிறங்கியுள்ளது.