மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு வட சீன கடல் பகுதி அத்தியாவசியமான இடமாக கருதப்படுகின்றது.
இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுகின்றன.
மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக கருதப்படுவதால் உலகின் 50 சதவீத மீன்பிடி கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.
அத்துடன், பிலிப்பைன்ஸ் இப்பகுதியில் தன் நாட்டு கப்பல்களை நிலைநிறுத்துவதுடன், இக்கப்பல்களுக்கு மாதாந்த அத்தியாவசிய பொருட்கள் சிறிய படகுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில், இரு வெவ்வேறு சம்பவங்களில் பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான ஒரு சரக்கு விநியோக படகின் மீதும், ஒரு கடலோர கப்பற்படை கப்பல் மீதும், சீனாவின் கடலோர கப்பற்படை கப்பல் வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறது” என தெரிவித்துள்ளது.