தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, தாம்பரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏசென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேலும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது நாளை மாலை வரை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.