அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர்கள் பலரின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், வர்த்தக படிப்பு படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் (வயது 19) என்பவர் கடந்த வாரம் மர்ம மரணம் அடைந்தார்.
இதேபோன்று, இண்டியானா மாகாணத்தில், பர்டியூ பல்கலைக்கழக மாணவரான நீல் ஆச்சாரியா என்ற மற்றொரு இந்திய மாணவர் ஜனவரி 28ஆம் திகதி காணாமல் போனதுடன், சில நாட்களில் அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ. படித்து வந்து மாணவர் விவேக் சைனி (வயது 25) என்பவர், கொடூர முறையில் கொல்லப்பட்டார்.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் பி. தவான் (வயது 18) என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.
இந்நிலையில், சமீர் காமத் (வயது 23) என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதேபோன்று, இந்தியரான சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4ஆம் திகதி மர்ம நபர்களால் துரத்தி, துரத்தி தாக்கப்பட்டார்.