ராஜஸ்தான், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் மீட்கப்பட்டனர்.
சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட லிப்ட் திடீரென நேற்று இரவு அறுந்து விழுந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் உள்பட 15 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அதிகாரிகள் சுரங்கத்தின் அடிப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு மேல்பகுதிக்கு திரும்பியபோது இவ்வாறு லிப்டின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்ற 14 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.