பிரதமர் மோடி தலைமையிலான 18ஆவது அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில், இரண்டு மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மொத்தம் ஏழு பெண்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
கடந்த ஜூன் 5ஆம் திகதி கலைக்கப்பட்ட முந்தைய அமைச்சரவையில் 10 பெண் அமைச்சர்கள் இருந்தனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்கள் பார்தி பவார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தர்ஷனா ஜர்தோஷ், மீனாட்சி லேகி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அத்துடன், புதிய பெண் அமைச்சர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்பிக்கள் அன்னபூர்ணா தேவி, ஷோபா-கரந்த்லாஜே, ரக்ஷா-கட்சே, சாவித்ரி தாக்கூர், நிமுபென்-பாம்பானியா, அப்னா தளம் எம்பி அனுப்ரியா-படேல் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில் மொத்தம் 74 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், 2019ஆம் ஆண்டு 78 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.