சுதேச விளையாட்டுகள் எங்கள் பண்பாட்டின் அடையாளங்கள் | கிளித்தட்டு விருது வழங்கலில் முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன்
யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் நிறைவுப் போட்டியும் விருது வழங்கலும் நேற்று இரவு சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் மைதானத்தில் மின்னோளி யில் இடம்பெற்றது . யாழ்ப்பாண தாச்சி விளையாட்டு கழகத்தின் அனுசர ணையுடன் நடைபெற்ற இப்போட்டியில் சண்டிலிப் பாய் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் நாவற்குழி சரஸ்வதி விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சண்டிலிப்பாய் உதயசூரியன் கழகத்தினர் வெற்றி பெற்றனர். இவ்விருது வைபவத்தில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பா ணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் கலந்து சிறப்பித்தார்.
வெற்றிக்கேடயங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்து உரை யாற்றுகையில் தொண்ணூறுகளில் பல்கலைக்கழகத்தில் தாச்சி/கிளித் தட்டு விளையாட்டினை அறிமுகம் செய்து அதன் பொறுப்பாளராகவும் இருந்த நினவுகளை மீட்டினார். இடையில் சற்று தளர்வுகண்ட போதும் மீண்டும் பல்கலைக்கழக மட்டத்தில் எழுச்சி பெறுவது பெருமகிழ்ச் சிக்குரியது . சுதேச விளையாட்டுகளின் அருமையை உணர்ந்து எங்கள் பல்கலைக் கழக பொன்விழாக்காலத்தில் ,விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா சுற்றுப்போட்டியினை முன்னெடுத்த விளையாட்டு விஞ்ஞான துறையினர் , எங்கள் பண்பாட்டின் அடையாள மாகவும் உடல் -உள –சமூக ஒருமைப் பாட்டுக்கான அரணாகவும் விளங் கும் இவ்விளையாட்டினை காத்திடும் கழகங்கள் எம் பாராட்டுக்குரியன. தேசப்பரப்பெலாம் பாடசாலை விளையாடுகளில் கிளித்தட்டு தவறாது இடம்பெறவும் சர்வதேச விளையாட்டு அங்கீகாரத்தினை இப்பண்பாட்டு விளையாட்டு பெறவும் துறைசார் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பது எம் பண்பாடுக் கடமை யாகும் என்றார்.
அவரைத்தொடர்ந்து விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலா நிதி சபா ஆனந்த் உரையாற்றினார். கிளித்தட்டின் நுண்ணிய உடலியக்க ,சமூகப் பயன்பாட்டினை தெளிவாக்கினார். பல்கலைக்கழக விளை யாட்டு கற்கையில் சுதேச விளையாட்டுகளுக்கான இடம் மேலும் விருத்தி செய்யப்படும் எனவும் உறுதி வழங்கினார். விளையாட்டு விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கேதீஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.