தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர்.
இதில் 19ஆம் திகதி அதிகாலை முதல் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிலா் மேலதிக சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 19ஆம் திகதி சிகிச்சை பலனின்றி 17 பேரும், 20ஆம் திகதி சிகிச்சை பலனின்றி 24 பேரும், நேற்று முன்தினம் 9 பேரும் என மொத்தம் 50 போ் உயிாிழந்தனா்.
இந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களில் சிலர் மரணத்தை தழுவி வருகிறார்கள். அந்த விதத்தில் நேற்று மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்னர்.
இதன் மூலம் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயா்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்றும் சிலரது உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி 203 போ் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவர்களில் 148 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுமாா் 20 போின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகாிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தொிகிறது.