இலண்டனின் ஏர் அம்பியுலன்ஸ் தேவை “எப்போதும் இல்லாத அளவிற்கு” உள்ளது என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது சொந்த சாதனைகளை முறியடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு 2,058 நோயாளிகளுக்கு உதவியதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பான புள்ளிவிவரங்கள் தலைநகரில் மேம்பட்ட முன் மருத்துவமனை பராமரிப்புக்கான தற்போதைய, அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன என்று தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலண்டனின் ஏர் அம்பியுலன்ஸ் சிகிச்சைக் குழு ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு நோயாளிகளைப் பார்ப்பதாகவும், இது முந்தைய நாளாந்தம ஐந்து என்ற சராசரியை விட ஒன்று அதிகம் என்று சுட்டிக்காட்டி உள்ளது.
சிகிச்சையைப் பொறுத்தவரை, தமது குழு வாரத்துக்கு ஒரு முறை சராசரியாக மார்பு அறுவை சிகிச்சை செய்வதாகவும், ஒவ்வொரு 36 மணி நேரத்திற்கும் ஒருமுறை இரத்தம் செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அந்த சேவை குறிப்பிட்டுள்ளது.