மியன்மார் நிலநடுக்கத்தினால் தாய்லாந்தின் பேங்காக் நகரில் ஏற்பட்ட கடும் அதிர்வுகளால் 33 மாடிகள் கொண்ட கட்டடம் இடிந்துவிழுந்தது.
அத்துடன், பேங்காக்கில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். 83 பேரை காணவில்லை.
தாய்லாந்துத் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அணுத்தீன் ச்சார்ன்விராகுல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், அனைத்து கட்டடங்களும் சோதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அத்துடன், கட்டட உரிமையாளர்களுக்கு மீண்டும் கட்டடங்களின் பாதுகாப்பைச் சோதித்துச் சான்றிதழ் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தாய்லந்துப் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாட் இடிந்துவிழுந்த கட்டடம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.