குழந்தை வரம் இல்லாதவர்கள் இருக்க வேண்டிய ஒரு சிறந்த
விரதம் கந்த சஷ்டி விரதமாகும் இந்த விரதம் முருகனுக்காக மெய்யுருகி மனமுருகி இருக்கும் போது நமக்கு கேட்கும் வரம் அனைத்தையும் அவர் அள்ளி தருவார்
இந்த வருட கந்த சஷ்டி விரதம் 25.10 .2022 ஆரம்பிக்கின்றது. கேதாரா கௌரி விரதம் இருப்பவர்கள் 26 .10 .2022 ஆரம்பிக்கலாம் .
இவ்விரதம் இருப்பவர்கள் செய்ய தகுதியானவை அதிகாலை எழுந்து நீராடி , இறைவனுக்கு பூக்கள் சாத்தி வழிபட வேண்டும் கோவிலுக்கு சென்று முருக கடவுளை வணங்கி வரவேண்டும் காலையும் மாலையும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் அல்லது கேட்கலாம் மாவிளக்கில் கடவுளுக்கு தீபம் ஏற்றலாம் மேலும் இவ்விரதத்துக்கு உபவாசம் இருப்பது நல்ல பலனை தர வல்லது