நமசிவாய என்பதன் பொருள் அறியாதவர் சைவ சமயியாக இருப்பதில் பயன் இல்லை நமசிவாய என்பதன் பொருள் என்னவென்று நாம் பார்த்தால் பஞ்சாசாரம் ஆகும் .பஞ்சாசாரம் ஐந்து சாரங்கள் , ஐந்து கரு பொருட்கள் பஞ்சசீலம் என்பதாகும்.
அதன் முதல் எழுத்தின் பொருள் உயிர்களை கொல்லாதே என்பதே ஆகும். இரண்டாவது எழுத்து குறிப்பது பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே மூன்றாவது எழுத்து குறிப்பது முறையற்ற சிற்றின்பம் இருக்கவே கூடாது கணவன் மனைவி உறவு விடுத்து முறையற்ற விதத்தில் இருக்கும் உறவு . நான்காவது மது மயக்கம் இருக்க கூடாது இதில் மது மற்றும் அடங்காது எங்கள் மதியை மயக்கும் அனைத்தும் இதில் அடங்கும் இறுதியான ஒன்று நேர்மையை சொல்லும் . இவ்வாறு அனைத்தையும் சரிவர கடை பிடித்தால் தான் பஞ்சாசர ஓதுவதற்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும் .
நாம் இந்த தகுதிகளை வளர்த்து கொண்டு நமசிவாய மந்திரத்தை ஓதுதல் மிக நல்லது.