உண்மை பார்வை என்பது எம் அக கண் கொண்டு பார்ப்பதே ஆகும்.
ஒரு ஆலமரத்தில் கண் தெரியாத துறவியொருவர் அமர்ந்திருந்து தியானம் செய்துகொண்டு இருந்தார். அங்கெ வந்த ஒருவன் ஏய் கிழவா இந்த வழியால் யாரேனும் சென்றார்களா? என்று கேட்டான் அதற்கு அந்த துறவி சொன்னார். இந்த வழியால் யாரும் செல்லவில்லை என்று அவர் கூறினார். அதன் பின் அவர் சென்றுவிட்டான் .
அதற்கு பின்னால் வந்த ஒருவன் ஐயா இந்த வழியால் யாரும் சென்றார்களா என்று கேட்டான் அதற்கு அந்த துறவி ஆம் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்டு கொண்டு ஒருவன் சென்றான் என்றார்.பின்னர் ஒருவர் வந்து துறவியாரே வணக்கம் இந்த வழியால் யாரும் சென்றார்களா என்று கேட்டான் அதற்கு வணக்கம் மன்னரே ,இருவர் நீங்கள் கேட்ட கேள்விகளை போலவே சில கேள்விகளை கேட்டு சென்றனர் என்றார் .
ஆச்சரியம் அடைந்த மன்னர் சொன்னார் துறவியை உங்களுக்கு நான் மன்னன் என்பது எப்படி தெரியும் முதலில் வந்தவர் ஒரு வீரன் அவர் தொனியில் எந்த வித மரியாதையும் இருக்கவில்லை இரண்டாமவர் அமைச்சர் அவர் தொனியில் அதிகாரம் இருந்தது. உங்கள் தொனியில் பணிவு இருந்தது இவற்றை வைத்தே நான் உங்கள் அனைவரையும் கண்டு கொண்டேன் இதுவே உண்மையான பார்வை என்றார்.