செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டிஷ் ஆஸ்திரேலிய MotoGP பந்தயங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டிஷ் ஆஸ்திரேலிய MotoGP பந்தயங்கள் ரத்து!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நீடிப்பதால் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய  மோட்டார் சைக்கிள் பந்தயங்கள்  இரண்டையும்  வெள்ளிக்கிழமையன்று  சர்வதேச மோட்டார்ஸ்போர்ட்  நிறுவனம் ரத்து செய்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நீடிப்பதால் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய  மோட்டார் சைக்கிள் பந்தயங்கள்  இரண்டையும்  வெள்ளிக்கிழமையன்று  சர்வதேச மோட்டார்ஸ்போர்ட்  நிறுவனம் ரத்து செய்தது.

பிரிட்டிஷ்  மோட்டார் சைக்கிள் பந்தயம்  சில்வர்ஸ்டோனில்  ஆகஸ்ட் 28முதல்  30 வரை  நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது.  பிலிப் தீவில் ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் அக்டோபர் 23-25 வரை நடைபெற   இருந்தது.

“இந்த   சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்ச்சியை ரத்து செய்வது குறித்து  அறிவிப்பது  எங்களுக்கு  வருத்தமளிக்கிறது” என்று மோட்டோஜிபி விளம்பரதாரர் டோர்னா ஸ்போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கார்மெலோ எஸ்பெலெட்டா கூறியுள்ளார்.

“இந்த தொற்றுநோய்  சூழலில்  போட்டி  தேதிகளை  மாற்றி அமைப்பதோ ,  அல்லது  அதன்  விளைவாக  போட்டி பாதைகளை  மீண்டும்   அமைத்தல்  மற்றும்  பல செயல்பாடு சிக்கல்களுக்கான  மாற்று வழியை  அமைப்பாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எஸ்பெலெட்டா கூறினார்.

சில்வர்ஸ்டோன் நிர்வாக இயக்குனர் ஸ்டூவர்ட் பிரிங்கிள், “பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பந்தயம் மோட்டோஜிபி ரத்து செய்யப்பட்டதில்   தான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன் ” என்று கூறியுள்ளார்.  ஆனால் இந்த விதிவிலக்கான நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுக்கு  நாங்கள்  உடன்படுகிறோம் என்றும் கூறினார். .

ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் பால் லிட்டிலும்  தன்  ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.   ஆனால் ரத்து செய்யப்பட்ட   முடிவுக்கு  ஆதரவு தெரிவித்தார்.

“:விக்டோரியா, ஆஸ்திரேலியா  மற்றும் உலகம் முழுவதும் உள்ள மோட்டோஜிபி ரசிகர்கள்  ஏமாற்றமடைவது க்ருய்து நாங்கள் வருத்தமடைகிறோம்.  உலகின் சிறந்த ரைடர்கள்  உலகின் சிறந்த இந்த  சுற்று பாதைகளில்  போட்டியிடுவதைக் காண முடியாமல் போய் விட்டது.  ஆனால் சரியான முடிவுதான்  எடுக்கப்பட்டுள்ளது,” என்று லிட்டில் கூறியுள்ளார்.

குளோப்-ட்ராட்டிங் மோட்டோஜிபி மற்றும் ஃபார்முலா ஒன் ஆகிய இரண்டும் கொரோனா வைரஸ்  தொற்று காரணமான ஊரடங்கால்  பாதிக்கப்பட்டுள்ளன.   அவற்றிற்கு உரிய நேரம்  இன்னும்  வரவில்லை என்பதால்  ஆண்டின் இரண்டாம் பாதியில்  ஒருவேளை  மறுசீரமைக்கப்பட்ட   கால அட்டவணை  வெளியிடும்  வாய்ப்பும் இருப்பதாக  தெரிவிக்கப் பட்டுள்ளது.

மொழியாக்கம்- அருள்ஜோதி அழகர்சாமி

 

நன்றி : zeenews.india

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More