இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிடம் பந்தை வீசுவதற்கு முன்னர் பந்தை முத்தமிடும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிட் 19 அச்சம் காரணமாக பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய விதிமுறைகளை ஐ.சி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பந்தை முத்தமிடுவதற்கும் ஐ.சி.சி தடை விதித்துள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்தநிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது முன்னாள் மும்பை இந்திய அணியின் வீரர் லசித் மலிங்கவின் செயற்பாடு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்படி கேள்வியை கேட்டு பதிவிட்டுள்ளதுடன் ஐ சி சி யின் புதிய விதிகளால் குறித்த சில வீரர்கள் தமது செயற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி வருமெனவும் இதற்கு மலிங்க என்ன சொல்கிறீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.