இங்கிலாந்தில் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டுள்ளது.இந்த வெற்றியின் மூலம், இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக 30 வருடங்களுக்கு பிறகு லிவர்பூல் அணி மகுடம் சூடியுள்ளது.நடப்பு தொடரின் செல்சியா அணிக்கெதிரான இறுதி லீக் போட்டியில், லிவர்பூல் அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.
லிவர்பூல் அணி 37 போட்டிகளில் விளையாடி 31 வெற்றிகள், 3 சமநிலை, 3 தோல்வி என 96 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.மன்செஸ்டர் சிட்டி அணி 37 போட்டிகளில் விளையாடி 25 வெற்றிகள், 3 சமநிலை, 9 தோல்விகள் என 78 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.மன்செஸ்டர் யுனைடெட் அணி, 37 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள், 12 சமநிலை, 8 தோல்விகள் என 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.
எவ்வாறாயினும் 2019ஆம் ஆண்டு பிபா கழகங்களுக்கு இடையிலான உலகக்கிண்ணம், யு.இ.எப்.ஏ சுப்பர் கிண்ணம் என முக்கிய சம்பியன் கிண்ணங்களை ஏந்திய லிவர்பூல் அணிக்கு, வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றி வீரர்களுக்கு மட்டுமல்ல பல்லாயிரகணக்கான இரசிகர்களும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.