அண்மையில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்து தொர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகை (29-வயது) இன்று (06) மரணமடைந்துள்ளார்.
இவர் 12 ரி-20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டி ஒன்றிலும் ஆடியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஜீப் தாராகை (Najeeb Tarakai) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜலாலாபாத்தில் கிழக்கு நங்கர்ஹாரில் வீதியைக் கடக்கும்போது கார் மோதியதில், படுகாயங்களுக்குள்ளான அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காபூல் அல்லது அண்டை நாடுகளின் மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது இழப்பிற்கு ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் இரசிகர்கள், பிரபல முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
29 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஜீப் தாராகை, இதுவரை ஒரு ஒருநாள் போட்டியிலும், 20 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.