பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
13பேர் கொண்ட இந்த அணியில், அஜாஸ் பட்டேலுக்கு பதிலாக பந்துவீச்சு சகலதுறை வீரரான மிட்செல் சான்ட்னர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில், டொம் பிளெண்டல், ட்ரென்ட் போல்ட், கெய்ல் ஜேமிசன், டொம் லதம், டேரில் மிட்செல், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், நெய்ல் வாக்னர். பிஜே வாட்லிங், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.