2022ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 4 தங்கப்பதக்கம் அடங்கலாக 13 பதக்கங்களை வென்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியின்; திருக்கோவில் கல்வி வலயம் சார்பாக 16 மணவர்கள் பங்கு பற்றிய நிலையில் 04 தங்கம் 06 வெள்ளி 03 வெண்கலம் என 13 பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் 02 தங்கம் 04 வெள்ளி 03 வெண்கலப்பதங்கங்களை பெற்றதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மகாவித்தியாலய மாணவர்கள் 02 தங்கப்பதங்கங்களையும் கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் 02 வெள்ளிப்பதங்கங்களையும் வென்றெடுத்தனர்.