இலங்கையின் 19 வயதின் கீழ் மூன்றாம் பிரிவு பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த புதனன்று (21) நடைபெற்ற பிலியந்தலை மத்தியக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி 48.4 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அண்டன் அபிஷேக் 76 ஓட்டங்களை பெற்றார். பதிலெடுத்தாடிய பிலியந்தலை மத்தியக் கல்லூரி அணிக்கு சென். ஜோன்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். எனினும் அந்த அணி 46.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்போது செதிக டில்மித் 52 ஓட்டங்களை பெற்றார்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய குழுவில் மொத்தமாக 4 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளதுடன், இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.