1930 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 22 வது உலக கோப்பை காற்பந்து போட்டிகள் கடந்த 20 /11 /2022 bts இசைக்குழுவின் ஆடல் பாடல்களுடன் வர்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கட்டாரில் ஆரம்பமானது.
இந்த போட்டிகள் 29 நாட்கள் நடை பெற உள்ளத்துடன் டிசம்பர்18 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது .இந்த போட்டிக்காக கட்டர் நாடு 220 அமெரிக்க டொலர்களை அள்ளி போட்டு செலவு செய்து தனது நாட்டின் பெருமையை பறை சாற்றி உள்ளது.
7 கண்டங்கள் 32 நாடுகள் போட்டியில் பங்கு பெறுவதுடன் கட்டார் தன் விருந்தோம்பலுக்காக 3 மிதக்கும் ஹொட்டலை அமைத்துள்ளதுடன் 7 நட்ஷத்திர தர ஹொட்டலையும் 8 குளிரூட்டப்பட்ட மைதான வசதிகளையும் 400 விமானங்கள் தரையிறங்கும் விமான நிலைய வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான ஒரு பெரும் ஆயத்தங்களை செய்துள்ள நிலையில் நூறாயிரம் கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளது.
இத்தகைய கட்டாரில் நடக்கும் போட்டிகள் 32 அணி 8 பிரிவுகளில் நடந்து வரும் நிலையில் ஈகுவாடவுடன் முதல் நாள் கட்டர் மோதி தோல்வியை அடைந்தது அடுத்து இங்கிலாந்து ஈரான் மோதியது இதில் 6 -2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இன்று அர்ஜன்டினாவுடன் சவூதி அரேபியா மோதியது இதில் அர்ஜன்டீனா நன்றாக ஆரம்பத்திலிருந்து விளையாடியது இதில் முதல் கோலை பெனால்டி முறையில் ஆர்ஜன்டினா வீரர் மெஸ்ஸி கோல் போட்டார் அடுத்து சவூதி அணி வீரர் அல் செஹ்ரி 48 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் அவரை தொடர்ந்து 53 வது நிமிடத்தில் சலாம் அல் தவிசாரியும் கோலை பதிவு செய்தார்கள்.
எனவே சவூதி 2 -1 என்ற கோல்கணக்கில் வெற்றியை பெற்றது இதில் மெஸ்ஸி நாலு உலக கோப்பைகளில் தன் அணிசார்பில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அடைகிறார்.
அடுத்து அர்ஜன்டினா மெக்சிகோவுடன் மோதவுள்ளது. மேலும் தொடர்ச்சியாக போட்டிகளை காணலாம்.