0
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.