இன்று (25.09.2023) ஹங்ஸோ விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 19 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் சொந்தமானது.
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
சீனாவின் ஹங்ஸோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 3ஆவது நாளான இன்று மகளிர் T20 கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை இந்திய அணி பெற்றது.
இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களையே பெற்றது.