செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு விவகாரம் | புதிய நீதியரசர்கள் குழு நியமனம்

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு விவகாரம் | புதிய நீதியரசர்கள் குழு நியமனம்

1 minutes read

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விசாரிப்பதற்கு புதிய நீதியரசர்கள் குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை (14) நியமிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசர்களான நிசங்க பந்துல கருணாரட்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியான நிசங்க பந்துல கருணாரட்ண, இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இதையடுத்து,சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலையில், தம்மிக்க கனேபொல இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலக முடிவெடுக்கவே, மீண்டும் பிரிதொரு நீதியரசர்கள் குழுவொன்று இந்த வழக்கு விசாரணையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த வழக்கு தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிபதிகளான டி.என்.சமரகோன், நீல் இத்தவெல ஆகியோரைக் கொண்ட புதிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழுவொன்று இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை மறுதினம் (16)  நீதியமன்ற விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து, தாம்  விலக தீர்மானித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிசங்க பந்துல கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More