செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

1 minutes read

தென்கொரி­யாவில் நடை­பெற்ற ‘ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப்’ ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க புதிய இலங்கை சாத­னை­யுடன் தங்­கப்­ப­தக்கம் வென்றார். இப்­போட்­டியில் மற்­றொரு இலங்கை வீரர் சுமேத ரண­சிங்க வெண்­க­லப்­ப­தக்கம் வென்­ற­துடன், பெண்­க­ளுக்­­கான ஈட்டி எறி­தலில் நதீஷா தில்­ஹானி வெண்­க­லப்­ ப­தக்கம் வென்றார்.

தென்கொரி­யாவின் மெக்போ நகரில் நடை­பெற்ற 2ஆவது ஆசிய எறிதல் சம்­பி­யன்­ஷிப்பில் நேற்று (15) நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் ருமேஷ் தரங்க பத்­தி­ரகே  85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்­கப்­ப­தக்கம் வென்றார். இதன் மூலம் புதிய இலங்கைச் சாத­னை­யையும், புதிய போட்டிச் சாத­னை­யையும் ருமேஷ் தரங்க படைத்தார்.

2015ஆம் ஆண்டில் திய­க­மவில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் சுமேத ரணசிங்க 83.04 மீற்றர் எறிந்­த­மையே இது­வரை ஈட்டி எறி­தலில் இலங்கையின் தேசிய சாத­னை­யாக இருந்­தது. அச்­சா­த­னையை 21 வய­தான ருமேஷ் தரங்க தென்­கொ­ரி­யாவில் நேற்று முறி­ய­டித்­துள்ளார்.

எனினும், ஒலிம்பிக் அடைவு மட்­டத்தை 5 சென்­ரி­மீற்­ற­ரினால் ருமேஷ் தரங்க அடையத் தவறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டிக்கு நேரடி தகுதி பெறு­வ­தற்­கான அடைவு மட்டம் 85.50 மீற்­றர்­க­ளாகும்.

அதே­வேளை, முந்­தைய இலங்­கைச் சாத­னை­யா­ள­ரான சுமேத ரண­சிங்­கவும் நேற்று ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் பங்­கு­பற்றி வெண்­கலப் பதக்கம் வென்றார். 33 வய­தான சுமேத ரண­சிங்க இப்­போட்­டியில் 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்­தானின் எம். யசீர் 78.10 மீற்றர் எறிந்து வெள்­ளிப்­பதக்கம் வென்றார்.

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீராங்­கனை நதீஷா தில்­ஹானி லேக்­கம்கே, 57.94 மீற்றர் எறிந்து வெண்­கலப் பதக்­கத்தை வென்றார். மற்­றொரு இலங்கை வீராங்­கனை டயனா ஹர்­சனி 48.46 மீற்றர் எறிந்து 7ஆவது இடத்தைப் பெற்றார்.

இப்­போட்­டியில் ஜப்­பா­னிய வீராங்­கனை மோமனி உவேதா 61.32 மீற்றர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் சீனாவின் சூ லிங்டான் 60.06 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More