0
தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2024 இம்முறை கனடாவின் மொன்றியல் லவால் இல் உள்ள பிளேஸ் பெல் அரங்கில் கராத்தே கனடா தேசிய சம்மேளனத்தின் தலைவர் சென்செய்.கிரெக் வொகி தலைமையில் நடைபெற்றது.
சுமார் 1,500 வீர வீராங்கனைகள் பங்குபெற்றிய இந்த போட்டியில் மத்தியஸ்தர்களாக, நடுவர்களாக கராத்தே ஒன்ராரியோ இன் தலைவர் சென்செய்.சிவா வடிவேலு, கராத்தே ஒன்ராரியோ இன் நடுவர் குழாம் உறுப்பினர் சென்செய். அருண் பழனிச்சாமி உட்பட நடுவர்களும் கடமையாற்றினர்.