Tuesday, September 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

3 minutes read

கொலம்போ பிரண்ட் ‍இன் நீட் சொசயிட்டி (Colombo Friend – in- Need Society) மற்றும் எய்ட்எக்ஸ் (Aidex) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த எய்ட்எக்ஸ் விளையாட்டு விழா (AIDEX SPORTS FESTIVAL) கொழும்பு – 02இல் அமைந்துள்ள  ரைபில் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற 32ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் வில்வித்தை, சக்கர இருக்கை போட்டிகள், சைக்கிளோட்டம், தடகள போட்டிகள் உட்பட 64 போட்டி நிகழ்வுகளில் 350க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில்  சிவில் தரப்பினர், படைத்தரப்பினர் என 2 பிரிவுகளுக்கு வெவ்வேறாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துடன், இப்போட்டிகள் ஆண், பெண் என இருபாலாருக்குமான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் இளம் வயது ‍போட்டியாளராக 6 வயதுடைய போட்டியாளர் ஒருவரும் அதிகூடிய வயதுமிக்க ‍போட்டியாளராக 88 வயதுடைய  போட்டியாளர் ஒருவரும் பங்கேற்றிருந்தமை இப்போட்டி விழாவின்  சிறப்பம்சமாகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பராலிம்பிக்கில் நவீத் ரஹீம் இலங்கை சார்பாக பங்கேற்றிருந்தார்.  இவர் ஆண்களுக்கான S9 பிரிவு 400 மீற்றர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 10ஆவது இடத்தை பிடித்திருந்தார். இவர் கொலம்போ பிரண்ட்  இன் நீட் சொசயிட்டி அமைப்பு மற்றும் எய்ட்எக்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் தனது விளையாட்டுத்துறை ஆற்றல்களை மேம்படுத்தியவர் ஆவார்.

அத்துடன் தேசிய பார குழுவில் அங்கம் வகிக்கும் சுபானி உதேஷிகாவும் எய்ட் எக்ஸ் இன் உதவியுடன் உலக பரா  சம்பியன்ஷிப், ஆசிய பசுபிக் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார்.

கொலம்போ பிரண்ட் ‍இன் நீட் சொசயிட்டி ( Colombo Friend – in- Need Society) மற்றும் எய்டெக்ஸ் அமைப்புகளானது சமூகத்தில் உடல் அங்கவீனமுற்ற பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களுக்கு  செயற்கை உறுப்புகளை உற்பத்தி செய்து, வழங்கி வருகின்ற அமைப்பாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More