செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 1பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 1

பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 1பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள் | பகுதி 1

2 minutes read

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)நாம் வாழும் பூமியானது நானூற்றி ஐம்பத்து நாலு (454) கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. அதில் இருபது (20) இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காக் கண்டத்தில் தோன்றினான். அதிலும் இரண்டு (2) இலட்சம் ஆண்டுகளுக்குமுன்தான் உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான நவ நாகரிகப் பண்பாடுடைய மனிதன் தோன்றினான். ‘மனிதன் தோன்றி என்பது ஆணும், பெண்ணும் தோன்றினர் என்பதுதான் பெருள்.

அவர்கள் தோன்றிய பொழுது பூமியில் ஓரறிவான புல்லும், மரமும், பிறவும், ஈரறிவான நந்தும், முரளும், பிறவும், மூவறிவான சிதலும், எறும்பும், பிறவும், நான்கறிவான நண்டும், தும்பியும், பிறவும், ஐயறிவான மாவும், புள்ளும், பிறவும், ஆகியவை வாழ்ந்து கொண்டிருந்தன. மனிதன்தான் உயிர்கள் வாழும் பூமிக்கோளை உலகம் என்று கணித்தான். அவனில் அமைந்த ஆறறிவு உலகத்தை நவீனமுறைப்படுத்தி, அறிவியல் முன்னிலை பெற்று, மக்கள் வாழ்வியலில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.

உலகத்திலுள்ள உயிரினங்கள் அத்தனைகளிலும் ஆண் இனமும், பெண் இனமும் உள்ளன. இந்த ஆண், பெண் இனங்களின் இணைவும், உறவும்தான் அந்தந்த உயிரினங்கள் அழியாது காப்பாற்றப்படுகின்றன. ஆண், பெண் ஆகிய இரு இனங்களில் ஓர் இனந்தானும் இல்லையெனில் அந்த உயிரினம் அழிந்து போவது திண்ணமாகும். எனவேதான் ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் இயற்கை தந்துதவுகின்றது. ஆணில் ஆண்மையும், வீரமும் அமைந்துள்ளதுபோல், பெண்ணில் பெண்மையும், அழகும், சாந்தமும் அமைந்துள்ளன.

ஆண் பெண்மையையும், பெண் ஆண்மையையும் விரும்பி ஒன்றுபட்டு வாழ்வியலில் இறங்குவர். ஆணின்பின் பெண்ணும், பெண்ணின்முன் ஆணும் சேர்ந்து ஓடுவதுதான் வாழ்க்கையாகும். ஆணும், பெண்ணும் இந்த ஓட்டத்தில் வெற்றிவாகை சூட ‘ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தாரகமந்திரத்தைக் கடைப்பிடிப்பர். அதில் நிச்சயம் வெற்றியும் காண்கின்றனர்.

இயற்கையில் பெண்கள் அழகுடையவர்கள். அவர்கள் உடலமைப்பு அவ்வாறமைந்துள்ளது. இதற்கு ஆணும் செயற்கைச் சாதனங்கள் கொடுத்துத் துணைநிற்பான். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’, ‘பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்’ என்பர். பெண்கள் அழகு பற்றிப் பாவலர், நாவலர், புலவர், கவிஞர், ஆசிரியர் ஆகியோர் பல பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் சங்ககாலப் புலவர்கள,; சங்ககாலப் பெண்ணின் தோற்றம், அவயவம் ஆகியவற்றை அடிமுதல் முடியீறாகப் புனைந்து பாடிய சங்கப் பாடல்கள் படிப்போர் மனதைத் தொட்டு நிற்கின்றன. இனிப் பெண் பெருமை பற்றித் தமிழ் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் பார்ப்போம்.

(1) தொல்காப்பியk;:- இடைச்சங்க காலத் தொல்காப்பியர் (கி.மு. 711) யாத்த மூத்த நூலான தொல்காப்பியம் பெண்கள் பற்றிக் கூறுவதையும் காண்போம். மனைவி (பொருள். 77-10,13, 163-1, 164-1, 170-2, 223-1) என்றும், கிழத்தி (பொருள். 90-3, 116-2, 140-2, 144-32, 153-2, 171-2, 178-2, 200-3, 490-2, 494-1, 495-1, 496-1, 499-2) என்றும், காமக் கிழத்தி (பொருள். 144-49, 145-18,36) என்றும், நல்லோள் (பொருள். 77-30) என்றும், காதலி (பொருள். 77-28) என்றும், கிழவி (பொருள். 111-5, 118-2, 121-3) என்றும், கிழவோள் (பொருள். (145-43, 230-1) என்றும், ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல், நிச்சமும் பெண்பாற் குரிய என்ப’  (பொருள். 96) என்றும், ‘உயிரினும் நாணம் சிறந்தது;  அதனினும் கற்புச் சிறந்தது’ (பொருள். 111) என்றும், ‘பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி’ (பொருள். 547) என்னும் பதின்மூன்றும் (13) பெண்பாற் பெயராகும் என்றும், ‘தோழி, செவிலி (பொருள். 490-1) என்றும், ‘விறலி, பரத்தை’ (பொருள். 491-1) என்றும், ‘ஒண்டொடி மாதர்’ (பொருள். 494-1) என்றும்,  தொல்காப்பியம் பெண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றது. மேலும் களவிற் கூற்று நிகழ்தற்குரியோராகj; ‘தோழி, செவிலி, கிழத்தி’ (பொருள்.490) ஆகியோரும், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோராக ‘விறலி, பரத்தை’ (பொருள்.491) ஆகிய பெண்களை நியமித்தமை பாராட்டுக்குரிய செயலெனலாம்.

 

 

தொடரும்…..

 

 

 

நன்றி : பதிவுகள் | பெண்ணியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More