தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு :
டாலரை முறியடிக்க பிரிக்ஸ் நாணயம்- 44 நாடுகள் ஆதரவு !
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு நிகரான செல்வாக்கு கொண்ட அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவது உட்பட முக்கியமான பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கூடுகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயம் :
வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து விரைவாக வளர்ந்து வரும் நாடுகள்.
டாலரை முறியடிக்க BRICS Currency; 44 நாடுகள் ஆதரவு என்றும், வரவிருக்கும் பிரிக்ஸ் (BRICS ) கூட்டத்தில் புதிய நாணயத்தை
வெளியிடுவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை (BRICS Currency) வெளியிடப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில் புதிய பிரிக்ஸ் நாணயம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இம்முறை இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என அதிபர் பதவிக்கு தலைமை வகிக்கும் தென்னாப்பிரிக்கா கூறினாலும், இந்த சந்திப்பில் ரஷ்யா டாலருக்கு எதிரான போக்கை வலுப்படுத்தும் என்பது உறுதி. 44 நாடுகள் எதிர்கால BRICS நாணயத்தைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது, மேலும் பல நாடுகள் BRICS-ல் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS summit) நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து கொள்ளமாட்டார் என தற்போது தென்னாப்பிரிக்க அறிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தி உள்ளார்.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின் பின்னர் எல்லா நாடுகளிலுமே மந்தமடைந்திருக்கும் வளர்ச்சியை எப்படி தூண்டுவது, அபிவிருத்தி செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு சீனாவும் பிரசிலும் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு உடன்படிக்கைப்படி, இவ்விருநாடுகளிடையிலான வர்த்தகம் அமெரிக்க டாலரில் அல்லாது இவ்விரு நாடுகளில் நாணயத்திலேயே நேரடியாக நடக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும்.
பிரிக்ஸ் வலுப்பெறுமா ?
பிரிக்ஸ் நாடுகள் (BRICS) வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து விரைவாக வளர்ந்து வரும் நாடுகள் ஆகும்.
இது 2010 வரை தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்காமல் பிரிக் என அழைக்கப்பட்டது.
பிரிக் என்ற சுருக்கப் பெயர் 2001ல் பயன்பாட்டுக்கு வந்தது. பிரிக்ஸ் உறுப்பினர்கள் அவை அமைந்துள்ள புவிப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாகும்.
இந்த நாடுகள் 2009 லிருந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன. பத்தாவது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஜீலை 2018ல் நடைபெற்றது. உள்ளடக்கிய வளர்ச்சி, வாணிகப் பிரச்சனைகள், உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இந்த உச்சிமாநாட்டின் விவாதத் தலைப்புகள் ஆகும்.
பிரிக்ஸ் -BRICS நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவீதம் பெற்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் உலக GDPல் தனது பங்கினை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகள் 43 சதவீதத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் இணைந்து சுமார் $ 4.4. டிரில்லியன் அன்னிய இருப்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் பிரிக்ஸின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இதன் உறுப்பினர் நாட்டு அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளார்கள். இதற்கு புதிய மேம்பாட்டு வங்கி (The New Development Bank) என்ற பெயரும் உண்டு.
முதல் பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மாநாடு 2012 லும் எட்டாவது மாநாடு 2016 லும் நடைபெற்றது.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரைக் கைவிட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தியுள்ளன. அத்தோடு பல சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், போர் இன்னமும் நீடித்து வருகிறது.
தென்னாப்பிரிக்க உச்சி மாநாடு :
தென்னாப்பிரிக்க உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புட்டின் வரப்போவதில்லை என அறிவிக்கப்ட்டு
உள்ளது. ரஷ்ய அதிபர் புட்டினை தீவிரமாக மேற்கத்திய நாடுகள் கண்கானிக்
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பினராக, புடின் இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், போர்க் குற்றங்களுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என்பதால் தென்னாபிரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்யச் சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. புட்டினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய நிறுவனங்கள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா அரசு அதிரடி தடை. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள வேளையில் இத்தடையின் பிரதிபலிப்பு இன்னமும் தெரியவில்லை.
அதே வேளை கருங்கடலில் கப்பல் போக்குவரத்து உக்ரைன் போரின் ஒரு பகுதியாக கருதப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போர் தீவிரமடையும் வேளையில் பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது உலகின் முக்கிய கவனத்தைப் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா