செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை 13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்

5 minutes read

தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது.

நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது ஈழம். இந்த வரலாற்றுப் பின் பின்புலத்தில் தான் ஈழப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் கரிசனை அதிகமாகக் காணப்பட்டது.

இலங்கையில் கடுமையான இன ஒடுக்குமுறை சூழல் தலைவிரித்தாடிய நிலையில் இந்தியாவின் தலையீடும் உதவியும் தேவை என்பதை தமிழ்நாடும் ஈழப் போராளிகளும் வலியுறுத்தியிருந்தனர்.

தனி ஈழம்

இதனால்தான் ஒரு கால கட்டத்தில் இந்தியா தனி ஈழம் அமைக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவை வழங்கியது. ஜூலை 29இல் நடந்த ஒப்பந்தம் இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஆயுதப் பயிற்சியை மேற்கொண்ட ஒரு காலமும் வரலாற்றில் இடம்பெற்றது.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

 

ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதுடன் மிகக் கடுமையான இனவாத வெறுப்பை வெளிப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசு, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை தர மறுத்ததுடன் தமிழ் மக்கள்மீது 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலை உள்ளிட்ட படுகொலைகளை அரங்கேற்றியது.

ஈழத்தில் தனி நாட்டுக்கான போராட்டம் பேரெழுச்சி பெற்றிருந்த நிலையில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம், இந்தியாவுடன் இணைந்து ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதாகக் காட்டிக் கொண்டது.

ராஜீவ் காந்தி

இந்திய அரசின் தலையீட்டில் இந்தியா முன் வைக்கும் தீர்வாக 13ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாளன்று சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயர்த்தனவுக்கும் (J.R. Jayawardena) இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் (RajivGandhi) இடையில் சிறிலங்கா (Sri Lanka) தலைநகர் கொழும்பில் (Colombo) வைத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கும் அடிப்படைத் தீர்வை இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையாக இணைக்கப்பட்டு தமிழர் தாயகப் பிரதேசமாக ஏற்பதாகவும் கூறப்பட்டது.

இலங்கையின் ஐக்கியம்

வடக்கு கிழக்கு தமிழரின் வரலாற்று வசிப்பிடம் அதன் அடிப்படையில், இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி, இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து, மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம், மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்தல் என்ற அம்சமும் அதில் இடம்பெற்றது.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

 

அத்துடன், இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி குறித்த உடன்படிக்கையை இருநாட்டுத் தலைவர்களும் மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு, கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள்

13ஐ நிராகரித்த விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை மற்றும் இந்தியா அன்று தீர்வினை முன்வைத்த வேளையில் விடுதலைப் புலிகள் அதனை முற்றாக நிராகரித்து தனி ஈழத்திற்கான போராட்டத்தை தொடர்ந்தனர்.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

ஈழப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் ஒருபோதும் தீர்வல்ல என்றும் அது தமிழரின் விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பும் சதி என்றும் அன்று தலைவர் பிரபாகரன் மேற்கொண்ட நிராகரிப்பு தீர்க்கதரிசனம் மிக்கது என்பதை காலம் உணர்த்தி வருகின்றது.

வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்றபோது அதில் எதுவுமில்லை என்று கூறி அதன் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் இந்தியாவிடமே தஞ்சமானார்.

பின் வந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் கோரும் அரசியல் தீர்வை முன்வைக்க மாட்டோம் என்று கூறிய சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) , விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த யுத்தத்தை ஆரம்பிப்பதாகவும் கூறினார்.

ஆளுநர் ஆட்சி

 

முதலில் கிழக்கை கைப்பற்றிய நிலையில் அங்கு தமக்கு ஏற்ற ஒருவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டு பின்னர் வடக்கின் மீதும் இனவழிப்புப் போரைத் தொடர்ந்தார்.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

வடக்கு மாகாண சபைத் தேர்தலை மிக நீண்ட காலம் தள்ளிப் போட்ட நிலையில், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றியிருந்தது.

அதன் பிறகு வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிந்த பிறகும் பல வருடங்களாத் தேர்தல் நடாத்தாமல் ஆளுநர் ஆட்சி தொடர்கின்றது.

சேடமிழுக்கும் 13ஆவது திருத்தம் மக்களாட்சி அமைக்கப்படாமல் ஆளுநர் ஆட்சி செய்யும் மாகாண சபையை அன்று புலிகள் நிராகரித்தது சரியான தீர்மானமாகவே தெரிகிறது.

காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை இன்னமும் கையளிக்காமல் எஞ்சிய அதிகாரங்களைக்கூட கையாள முடியாது மத்திய அரசின் ஆதிக்கமும் அழுத்தங்களும் தலையீடுகளும் கொண்டது என்பதனால்தான் புலிகள் அன்று 13ஐ நிராகரித்தனர். அந்த தீர்மானம் சரியானதாகவே தெரிகிறது.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

அத்துடன் சிறிலங்கா அரசும் பேரினவாதிகளும் தமிழர்களின் நிலத்தையும் இனத்தையும் ஒடுக்கும் செயற்பாடுகளை தடுக்காது, அந்த ஒடுக்குமுறைகளுக்க வழிகோலும் வகையில் 13ஆவது திருத்தம் இருக்கிறது என்பதனால்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்று இதனை எதிர்த்ததும் தீர்க்க தரிசனம் கொண்ட போராட்டமுமாகும்.

13ஐ நடைமுறைப்படுத்தவே போர் செய்கிறோம் என்று ராபஜபக்ச அரசு கூறியது. இனவழிப்புப் போரை செய்துவிட்டு 13ஐ நடைமுறைப்படுத்தாமல் எந்த தீர்வையும் தரமாட்டோம் என்று ராஜபக்சவினர் அடம்பிடித்தனர்.

பிரபாகரன் நிராகரித்த 13ஐ தமிழ் தலைவர்கள் ஏன் கோருகின்றனர் என்று அன்று கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) பாதுகாப்புச் செயலாளராக இருந்து கேட்டார்.

தமிழர் தேச சுயாட்சி

விடுதலைப் புலிகளை அழிக்க 13ஐ கையில் எடுத்த ராஜபக்சவினர் அதை நடைமுறைப்படுத்தாமல் நழுவவும் விடுதலைப் புலிகளை கையாள்வது எல்லாம் எவ்வளவு அநீதியானது? அன்று ராஜபக்சவினர் போலவே இன்று ரணிலும் இனப்பிரச்சினை விடயத்தில் நழுவி வருகிறார்.

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது…! | 13Th Amendment Prabhakaran S Prophetic Rejection

இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு இன்றுடன், 37 வருடங்கள் ஆகின்ற பொதும் வெகு சொற்பகாலமே அதுவும் குறையான ஒரு தீர்வு, குறைநிலையில் நடைமுறையில் இருந்துள்ளது.

இப்படியாக 13ஆவது திருத்தம் தொடர்ந்தும் சேடம் இழுக்கிறது. எனவே 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வல்ல என்பதும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேச சுயாட்சியை வழங்கும் சமஸ்டியே தமிழருக்கான தீர்வு என்பதையும் இன்றைய நாள் நன்கு உணர்த்தி நிற்கிறது.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More