2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
போர், இடப்பெயர்வுகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் நாளுக்கு நாள் வைத்திய சேவையின் தேவை அதிகரித்துக்கொண்டு சென்றது. இடம்பெயர்ந்த இடங்களில் இயங்கி வந்த அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் படிப்படியாக தங்கள் சேவைகளை இடைநிறுத்தி கொண்டு வந்தனர். ஆனால் சுகாதார திணைக்கழகத்தை பொருத்த வரை இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த இடங்களில் சேவையை விஸ்தரிக்க வேண்டிய நிலை இருந்தது.
ஏற்கனவே சிக்கலடையும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் திட்டம் இட்டபடி செய்யவேண்டி இருந்தது. குறிப்பாக சுகாதார திணைக்கழகத்திக்கு தேவையான மருந்து பொருட்கள் கொண்டு வந்து அதனை உரிய முறையில் சேமித்து பயன்படுத்துவது ஒரு சவாலான கடமையாக இருந்தது.
வன்னிப் பகுதிக்கு எடுத்து வர வேண்டிய பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி பெற்றே கொண்டு வரவேண்டி இருந்தது. கொழும்பு சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் கொண்டு வரவேண்டிய மருந்துக்கான ஆவணத்தை பெற்ற பின்னர் மீண்டும் பல பகுதிகள் ஊடாகவே உறுதியான அனுமதி பெறக் கூடியதாக இருந்தது.
மருந்து வழங்கல் பிரிவில் வழங்கப்பட்ட மருந்துகளின் விபரங்களை கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் என்ற வகையில் கோரிக்கை கடிதத்தை அரசாங்க அதிபரின் சிபரசுக்காக அனுப்பப்பட வேண்டி இருந்தது. அரசாங்க அதிபரின் சிபரசுக்குப் பின் அக்கடிதம் கொழும்பு உலக வர்த்தக மைய கட்டிடத்தில் நான்காம் மாடியில் இயங்கிய அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகம் (Commissioner General of Essential Services) அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.
அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்துக்கு அனுமதிக்கு சென்று அவர்களின் அனுமதியின் பின்னர் அனுமதி பிரதி ஒன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு முகவரியிட்டு அனுப்பி வைக்கப்பட்டது. மதவாச்சி, ஈரப்பெரியகுளம், வவுனியா பொலிஸ் பகுதி ஆகிய இடங்களில் கடுமையான சோதனைக்கு பின்னர் வவுனியாவிக்கு கொண்டு வரப்பட்டது.
வவுனியா புகையிர வீதியில் வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான முத்தையா மண்டபத்துக்கு முன்புறம் அமைந்திருந்த களஞ்சியப் பகுதி வாடகைக்கு பெறப்பட்டு அங்கு தற்காலிகமாக களஞ்சியப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைக்கு பின்னரே வன்னிப் பகுதிக்கு கொண்டு வரக் கூடியதாக இருந்தது. ஓமந்தை பகுதியில் சகல பொருட்களும் முடக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அழிக்கப்பட்ட பொருட்களின் விபரம் சரி பார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அதற்காக மருந்து பொருட்கள் பற்றி விபரம் அறிந்த உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைக்கு பினனர் விடுதலை புலிகளின் சோதனை சாவடியில் இறக்கப்பட்டு சோதனை இடப்பட்டு பின்னர் கிளிநொச்சி சுகாதார பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
2008 பிற்பகுதியில் கிளிநொச்சி நகர மக்கள் படிப்படியாக இடம்பெயர தொடங்கிய போது புளியம்பொக்கணை தற்காலிக் பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தில் ஓர் தற்காலிக் மருந்து களஞ்சிய கட்டிடம் அமைக்கப்பட்டு மருந்து பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டது. பின்னர் இடம்பெயர் வைத்தியசாலைகளுக்கு மிகவும் கவனமாக அனுப்பி வைக்கப்பட்டது. கையிருப்பில் இருந்த மருந்து பொருட்களை பாதுகாப்பகவும் சிக்கனமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பின்னாளில் இடம்பெயர்ந்து ஓடுகின்ற போது ஒவ்வொரு இடங்களிலும் பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்தப்பட்டது.
ஒரு தடவை மருந்துகளை அந்த பகுதிக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பொறுப்பாக கடமை ஆற்ற வேண்டி இருந்தது.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/