2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
வன்னிக்கான அனைத்து தேவைகளும் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மேற்கொள்ளப்பட்டது.. ஓமந்தை பகுதியில் சுமார் 400 மீற்றர் மனித நடமாற்ற பகுதியின் வடக்கு பகுதியில் புலிகளின் காவலரனும் தெற்கு பகுதியில் இராணுவத்தின் காவலரணும் அமைந்து இருந்தது.
காலையில் 9.00 மணிக்கு இப்பகுதிக்கு வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் இரு பகுதிகளின் விளிம்பிலும் செஞ்சிலுவைச் சங்க கொடியை ஏற்றுவார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரும் தத்தமது நுழை வயில்களை திறந்து விடுவார்கள்.
மருந்து பொருட்களும் வைத்தியசாலைக்கு தேவையான ஏனைய பொருட்கள் அனைத்தையும் ஓமந்தை சோதனை சாவடிக்கு ஊடாக பல சிரமங்களுக்கு மத்தியில் எடுத்து வரப்பட்டன. அனுமதி பெறப்பட்ட மருந்து பொருட்கள் எடுத்து வருகின்ற போதும் அதனையும் அப்பகுதியில் இறக்கி பரிசோதனைக்கு உட்படுதிதப்படும். இதற்காக இராணுவத்தில் விசேட பயிற்சி பெற்ற உத்தியோகத்தர் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி இருந்து தினசரி நோயாளிகளுடன் செல்கின்ற நோயாளர் காவுவண்டி சோதனை சாவடியில் சோதனையின்றி வவுனியா வைத்தியசாலைக்கு சென்று வரக்கூடிய பதிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓமந்தை சோதனை சாவடியூடாக வரும் மருந்து பொருட்களை எடுத்து வருவதற்காகவும் தொடர்புகளுக்காகவும் கிளிநொச்சி சுகாதார சேவை பணிமனையின் இணைப்பு செயலகம் ஒன்று வவுனியா சுகாதார சேவை பணிமனையில் இயங்கி வந்தது .அத்துடன் தற்காலிக களஞ்சியம் ஒன்றும் வவுனியா பகுதியில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. சில சமயங்கள் உரிய அனுமதி கிடைக்காமல் சில பொருட்கள் பல மாதக்கனக்காக வவுனியாவில் தேங்கி இருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. ஒரு சமயம் இவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களில் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. போலீஸ் முறைப்பாடு செய்திருந்த போதும் ஒரு மாதத்தின் பின்னர் மேற்படி பொருட்களை வவுனியா போலீசார் மீட்டு தந்தனர்.
ஓமந்தை சோதனை சாவடியின் ஊடாக சென்று வருவது எப்போதும் சோதனையும் பயமும் நிறைந்ததாகவே காணப்பட்டது….
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/