2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
1995 ம் ஆண்டு புரட்டாதி மாதம் இறுதிப் பகுதியில் தீடிர் என ஒருநாள் மாலை வலிகாமத்தில் இருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து சாவகச்சேரி மற்றும் வன்னிப் பகுதியை அடைந்தனர். சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து இருந்த மக்களும் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட மக்களும் 1996 ம் ஆண்டு சித்திரை மாதம் மீண்டும் இடம்பெயர்ந்து ஆபத்தான கிளாலி பாதை ஊடாக வன்னியை அடைந்தனர். ஆனாலும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அரைவாசிக்கு மேலான மக்கள் யாழ் மாவட்டத்திலேயே தங்கிவிட்டனர். 1996 ம் ஆண்டு சித்திரை மாதம் அளவில் வலிகாமத்தில் இருந்தும் சாவகச்சேரியிலும் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய இடங்களுக்கு சென்ற அதேவேளை வலிகாமம், தென்மராச்சி, வடமராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த லட்ச்சக்கணக்கான மக்கள் வன்னி பகுதியை வந்தடைந்தனர்.
வன்னியை வந்தடைந்த மக்கள் வன்னியில் இருந்த கிளிநொச்சி, அக்கராயன், மல்லாவி, மாங்குளம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய நகரங்களையும் அதனை அண்டிய காட்டுப்பகுதியிலும் குடியேறி இருந்தனர் போர் இடப்பெயர்வு தொழில் வாய்ப்பு இன்மை போன்ற கஷ்டங்களுக்கு மேலாக மலேரியா நோய் மக்கள் மத்தியில் பெரும் பய பீதியை தோற்றிவித்தது. அக் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தை நுளம்பு மாவட்டம் என்பார்கள். இதில் ஓர் விசேட அம்சம் என்னவெனில் வன்னியை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள் மலேரியா நோய் தாக்கத்திற்கான எதிப்பு சக்தியை கொண்டிருந்தமை ஆகும். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தான் மலேரியா நோயின் தாக்கம் கடுமையாக இருந்தது.இடம்பெயர்ந்த குடும்பம்களில் சிலரின் உயிர்கள் கடுமையான மலேரியா தாக்கத்தினால் பிரிந்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். இதன் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வவுனியா திருகோணமலை ஊடாக மீண்டும் யாழ்ப்பாணத்தை அடைந்தனர்.
பின்னாளில் மலேரியா நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டன அக்காலப்பகுதியில் பலர் மலேரியா நோயினை கட்டுப்படுத்த சிறப்பாக சேவை ஆற்றினார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் DR. காசிலிங்கம் சுயந்தன் நெடுங்காலமாக மலேரியா தடுப்பு இயக்கத்தை வழி நடத்தி மலேரியா நோயினை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். மத்தியில் மலேரியா தடுப்பு இயக்கத்தினரால் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்கள் மலேரியாவை முற்றாக ஒழிக்கும் கட்டத்திக்கு கொண்டு வரப்பட்டது.
2005 ஆம் ஆண்டு பிற்பகுதியில் DR திலீபன் மலேரியா தடுப்பு இயக்கத்தின் மருத்துவ உத்தியோகத்தராக பொறுப்பேற்று சிறப்பாக கடமையாற்றி இருந்தார் 2007ம் ஆண்டு’ ஆரம்பித்த வன்னி இடப்பெயர்வுகள் மலேரியா நோய் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என முன் கூட்டியே அனுமானிக்கப்பட்டது. இடம்பெயர்ந்த பல பிரதேசங்களில் மலேரியா தடை இயக்க உத்தியோகத்தர்கள் பொறுப்போடு கடமையாற்றினார்கள். பல ஆண்டுகளாக கிளிநொச்சி மலேரியா’ தடை இயக்கத்தின் அலுவலகத்தில் தங்கியிருந்த அமரர் சிவகுரு அவர்கள்( பொது வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர்) இரவு பகலாக கடமை ஆற்றியமை மறக்க முடியாதது. அத்தோடு வெளிகள உத்தியோகத்தர் திரு ராயன் மூத்த பொது வெளிகள உத்தியோகத்தர் திரு சிறிதரன் ஆகியோர் சிறப்பாக கடமைகளை செய்ததுடன் இடம்பெயர்ந்த தங்கியிருந்த இடங்களில் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளில் இடுபட்டனர்.
இவ்வாறு இருக்கையில் 2008 புரட்டாதி மாதம் ஆழியவளை உடுத்துறை பகுதிகளில் தீடிர் என மலேரியா நோயின் தாக்கம் பலரிடமும் காணப்பட்டது. எனவே போர் சூழலின் மத்தியிலும் வெளிக்களாக உத்தியோகத்தர்கள் அப்பகுதிக்கு விரைந்து தடுப்பு நடவடிக்கைகளில் இடுபட்டனர். அப்பகுதிக்கு கடமைக்கு சென்றிருந்த வேளையில் இரு உத்தியோகத்தர்கள் செல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்தாலும் ஏனைய உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தங்கி இருந்து கடமையை முடித்த பினனர் தான் அங்கிருந்து வெளியேறினர். அக்காலப்பகுதியில் சுமார் 44 சுமார் மலேரியா தொற்றுக்கு உள்ளானதாக எதிர் காலத்தில் தெரிய வந்தது.
போரின் காரணமாக இடம்பெயர்ந்து பல பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள் மத்தியில் கடமையாற்றிய உததியோகத்தர்கள் ,இறுதியாக 2009 தை மாதக் காலப்பகுதியில் விஸ்வமடு சுகந்திர பகுதியில் தமது கடமையை செய்து முடித்தனர்.
அங்கிருந்த இடம்பெயந்த மக்கள் கடலால் சூழப்பட்ட முள்ளிவாய்க்கால் மாத்தளன் பகுதியில் இருந்த வேளையில் மணல் பங்கான பிரதேசமாக இருந்தமையாலும் கடலால் சூழப்பட்டு இருந்தமையினாலும் நுளம்பின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இது மட்டும் அல்லாமல் அப் பிரதேசங்களில் பல்வேறு தோற்று நோய்களின் பரம்பல் குறைவாகவே காணப்பட்டது,
தொடரும்….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/