நமது சமுதாயத்தை பொறுத்தவரை இன்று வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று தொலைக்காட்சி ஆகும். அத்துடன் இது மக்களின் முக்கிய பொழுதுப்போக்கும் கூட, இதனால் அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவழிக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் அது சிறந்ததாக காணப்பட்டாலும் எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக குழந்தைகளின் கல்வியினை சீர்குலைப்பதுடன் அவர்களுக்கு உடல்– உள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வின் மூலம் பெறப்பட்ட உண்மையாகும்.
குழந்தைப் பருவமானது ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சியில்(Pநசளழயெடவைல னநஎநடழிஅநவெ) முக்கிய பங்கு வகிக்கிறது என்று உளவியாலர் குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆளுமை வளர்ச்சிதான் ஒருவருடைய எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. ஒரு குழந்தை ஒரு பழக்கத்தை பழக ஆரம்பித்துவிட்டால் அக் குழந்தையின் சிந்தனைகள், செயல்கள் அதைச் சார்ந்தே காணப்படும். இது போலத்தான் தொலைக்காகட்சி பார்க்கும் பழக்கமும் குழந்தையின் சிந்தனைகள், செயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் சிலர் குழந்தை தொலைக்காட்சி பார்க்கும் போது “குழந்தை தானே” என எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்காது கவனக் குறைவாகவும் இருந்து விடுவார்கள். வேறு சில பெற்றோர்கள் வெளியில் சென்று குழந்தைகளுக்கு வேறு பிரச்சனைகள் வருவதைவிட வீட்டில் தொலைக்காட்சியை பார்ப்பதை அவர்களே அனுமதிப்பதுடன் அதை குறையாகவும் எடுத்துக் கொள்ளமட்டார்கள். காலப்போக்கில் இது அவர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக பரீட்சை நேரங்களில் குழந்தைகளை அவர்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது அக்குழந்தை கோபம், சினம், சாப்பிடாமல் இருத்தல், ஏட்டில் கிறுக்குதல், புத்தகத்திலுள்ள பக்கங்களை புரட்டிக் கொண்டிருத்தல், அந்த இடத்திலேயே தூங்கிவிடுதல், என்பன அறிகுறிகள் குழந்தைகளின் செயற்பாட்டில் காணப்படும். இதன் காரணமாக படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
குழந்தைகளுக்கு தொலைக்காட்சி கார்ட்டூன் படங்கள் பல உளச்சிக்கல்கள் என்பதில் ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் .அது அவர்களுக்கு சந்தேகம், அதீத கற்பனை என்பவற்றை ஏற்படுத்தும். மேலும் கார்ட்டூனில் பிம்பங்கள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டன. குழந்தைகள் இவற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்களுக்கு விரைவில் பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. கிராபிக்ஸ் உத்திகளாக கார்ட்டூன்களாக வரும் வன்முறைகள் ஏற்படுத்தும் உடல்–மன நல பாதிப்புகளும் அனேகம், மேலும் அதிகமாக சண்டைக் காட்சிகள் பார்ப்பதால் அது மாதிரியே தம்மை கற்பனை செய்து பார்க்கவும் முயற்சிக்கின்றனர் காலப்போக்கில் இவற்றை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதனை செய்து பார்க்கவும் முயற்சிக்கின்றனர்.இது குழந்தைகளின் மனநிலைகளையும், பழக்கவழக்கங்களையும் பாதிப்போடு, தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளானாலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும் பல மோசமான பாதிப்புகளைள உண்டாக்கலாம்.
இதில் முதன்மையாக, மிகுதியாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், மற்றவர்களுடன் பேசிப்பழக கிடைக்கும் நேரமும் ஏற்படும் சந்தர்ப்பங்களும் மிகக் குறைவு. இதனால் அவர்கள் நல்ல உறவு முறைகளை வளாத்துக் கொள்ளவும், பிறருடன் சுமூகமாக தொடர்பு கொள்ளவும் கற்றுக் கொள்ளாமல் பேகலாம். இதனால் சமூகதிலிருந்து ஒதுங்கியிருக்க அதிம் விரும்புவர்கள்.
மேலும் மிகுதியாக தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகள் தங்களுடைய ஆக்கப்பூர்வமான எண்ணங்களை(ஊசநயவiஎந வாiமெiபெ) ஈடுபாடுகளை வெளிக்காட்ட வெகு சில சந்தர்ப்பங்களே ஏற்படுகின்றன. ஆனால் புத்தகங்கள் படிக்கும் குழந்தைகட்கு நல்ல ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், மனப்பாங்கு, மனக்கட்டுப்பாடு என்பன வளர்கின்றன. புத்தகங்களை படிக்கப் படிக்க சொல்வளம், சொல் ஆக்கம் ஆகியவை வளர்கின்றன. தொலைக்காட்சி பார்க்கும் தொடர் பழக்கம் இது போன்ற ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை குழந்தையின் வாழ்விலிருந்து அறவே நீக்கிவிடுகின்றன.
இவற்றோடு இரவு பிந்தி விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது தூக்க நேர ஒழுங்குகளை சீர்குலைப்பதுடன்(ளுடநநிiபெ னுளைழசனநச)இ காலையில் குழந்தைகளை பிந்தி எழுந்து அவசரமாக பாடசாலைக்கு செல்லும் பொழுது பதட்டமான(வுநளெழைn) மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களது ஆக்கத்திறனும், கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் என்ன செய்யலாம்?
- இத்தகையச் சூழலில் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.
- தாயும் தந்தையும் சேர்ந்து பார்த்துக் கொண்டு குழந்தையை மட்டும் தொலைக்காட்சி பார்க்காதே, படி என்று கட்டாயப்படுத்துவது , அவர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டிடவிடும், இது மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கும், இதனால் குழந்தை படிக்கும் நேரங்களில் குடும்பத்தினர் அனைவருமே தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கலாம்.
- பொதுகாவே வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்வது நல்லது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நல்ல நிகழ்ச்சிகளாக தேர்ந்தெடுத்து பார்க்கத் திட்டமிடலாம்.
- நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கத் திட்டமிடும் பொழுது மருத்துவ, ஆரோக்கிய குறிப்புகள், பண் பாட்டு, கலாச்சார மற்றும் வாழ்வியல் நிகழ்ச்சிகள், வினாடி வினா மற்றும் பொது அறிவு வளர்க்கும் நிகழ்ச்சிகள், தொழில் நுட்பம் வளர்ச்சியினை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் என்பவற்றை பார்க்கலாம்.
- அவ்வப்போது நடைபெறும் நாட்டு மற்றும் சர்வதேச நடப்புகள் ஆகியவற்றை குழந்தைகள் பார்க்க நாம் அனுமதிக்கலாம். ஆனால் இந்நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளின் வயதுக்கேற்றவைகளாக தேர்ந்தெடுப்பது அவசியம்.உதாரணமாக தினசரி செய்திகளில் காட்டப்படும் சர்வதேச போர் நடவடிக்கைகளும், சமூகக் கலவரங்களும்,வன்முறைகமே தினம் தினம் செய்திகளாகும், இது குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கிவிடலாம் இதனால் முடியுமானவரை குழந்தைகளுடன் நிகழ்ச்சிகளை அமர்ந்து பாருங்கள், நிகழ்ச்சியின் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
- ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதோடு , வேறு பல ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக்கவேண்டும். குழந்தைகளுக்கு நல்ல பல புத்தகங்கள் வாங்கி கொடுப்பதோடு அவர்களோடு சேர்ந்து படித்து, படிக்கும் ஆர்வத்தினை அவர்களில் ஏற்படுத்துங்கள்.
- குழந்தைகளின் அறிவு வளர்வதோடு, உடல் உறுதியும் வளர்பபது அவசியம். அதற்கு வேண்டிய விளையாட்டு, ஓட்டம், ஆடல் பாடல் மற்றும் இவற்றோடு நுண்கலைகள் போன்ற போக்குகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் இவை அவர்களுடைய உடல் –உள ஆரோக்கிய த்திற்கு உறுதுனையாக அமையும்.
இன்றைய பெற்றோர்கள் பகுத்தறிவோடு தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முன் மாதிரிகளாய் இருந்து தொலைக்காட்சி என்னும் பிரம்மாண்டமான ஊடகத்தின் நல்விளைவுகளை அவர்களுக்கு பெற்றுத் தருவதோடு, அவற்றின் தீமைகளிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு உண்டு.
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே…….”
-கலாநிதி கே. கஜவிந்தன். B.A(Hons).,MA.,PGDY.,PGDPC.,M.Phill.,PhD
கட்டுரையாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்.