செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை நைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன்

நைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன்

4 minutes read

பெண் போராளிகள் எங்கே?

மாதர் தினம் என்றதும் பெண் விடுதலை பற்றி பலரும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.  பெண் விடுதலை பற்றி பேசுவதை விட விடுதலைக்காகப் போராடிய பெண்கள் பற்றிப் பேசினால் என்ன என்று எனது சிந்தனையில் ஒரு போராட்டம்.  அந்தத் தேடலின் பதிவு தான் இது.

சிறு வயதிலிருந்து விதைக்கப்படும் சிந்தனைகள் தாம் நாம் வளர்ந்த பின்னர் எம் நடத்தையினை முடிவு செய்கின்றன என்று நம்புபவன் நான்.  “வீண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை” என்று சொல்லி வளர்த்தால் வளர்ந்த பின் அந்த ஆண் பிள்ளை தான் என்னவும் செய்யலாம் என்று சிந்தப்பதைத் தடுக்க முடியாது தானே.  “கற்காலத்தில் ஆண்வேட்டையில்ஈடுபட,பெண்உணவுசேகரிப்பதிலும், குழந்தைகளைக்கவனிப்பதிலும்ஈடுபட்டாள்” என்ற பொதுவான சிந்தனைக்கு முரணாக “வேட்டை முடிந்து குகைக்குள் வந்த பெண் அவளது கணவன் சோம்பேறியாய் உறங்கியிருப்பதைக் கண்டு அவன் தலை முடியைப் பிடித்துத் தறதறவென்று வெளியே இழுத்து வந்தாள்” என்று, சிறுவயதில் ஒரு நாவலில் படித்த ஞாபகம்.  முறம் எடுத்துப் புலி விரட்டிய தமிழ்ப் பெண்ணின் கதைகளைப் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவர்கள் மனதில் உரமேறி அவர்களும் போர்க்குணம் மறக்காமல் வளர்வார்கள் அல்லவா?

மனிதவரலாற்றின்பெரும் பகுதியில் போர் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தான கலை என்று தான் மனித குலம் இயங்கி வந்துள்ளது.  இருப்பினும், ஒருசிலசந்தர்ப்பங்களில், தனிப்பட்டபெண்கள்போர்புரிந்து வரலாறு படைத்துள்ளார்கள்.

பெண் போராளிகள்

ஃப்ரான்ஸ் நாட்டை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரை விரட்டியக்கப் போராடினார் ஜோன்ஆஃப்ஆர்க் (Joan of Arc); ரோமானியர்களுக்குஎதிரான கிளர்ச்சியில், தனதுஆங்கிலேயப் படைகளைவழி நடத்தினார் Boudicca; ஆங்கிலேயருக்குஎதிரானஇந்தியக்கிளர்ச்சிஆரம்பமாகிய போது கடுமையாகப்போர்புரிந்தார்ஜான்சிராணி.  அதே போல்,வேலுநாச்சியார், இலட்சுமிசாகல், வை. மு. கோதைநாயகிஅம்மாள், கி. சாவித்திரிஅம்மாள், கரினி, அம்புஜம்மாள், குமுதினி, தில்லையாடிவள்ளியம்மை, ருக்மணிலட்சுமிபதி என்று பல தமிழ் பெண்களும் இந்தியவிடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.

எங்கும் பதியப்படாத ஒரு செய்தி – நைஜீரியா என்ற நாட்டில் நடந்த ஃபயாஃப்ரான் (Biafran)அல்லது பயாபிராபோர் என்று அறியப்பட்ட நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஒரு தமிழ்ப் பெண் போராளியாக ஆயுதம் எடுத்துப் போராடினார்.  இலங்கைத் தீவின் தெல்லிப்பளை என்ற இடத்தில் பிறந்த இவர், நைஜீரிய பல்கலைக்கழகத்தின் ந்சூக்கா வளாகத்தில் (University of Nigeria, Nsukka) கல்வி கற்பதற்காகப் புலமைப் பரிசில் பெற்று சென்றிருக்கிறார்.  அங்கு அவருக்கு ஃபயாஃப்ரான் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களது போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து கொண்டார்.  ஒரு சண்டையில் வீரச்சாவடைந்த அவரைப் போற்றி போராளிகள் பாடல்கள் இயற்றி, பாடியுள்ளார்கள்.  எழுபதுகளின் பிற்பகுதியில் அங்கு ஆசிரியர்களாகக் கடமையாற்ற இலங்கையிலிருந்து சென்றவர்களிடம், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தெல்லிப்பளை பெண் போராளியைப் போற்றும் பாடலைப் பாடிக் காட்டியிருக்கிறார்கள்.

படையில் பெண்கள்

இப்படித் தனிப்பட்ட பெண் போராளிகள் பலர் வரலாற்றில் எழுதப்பட்டும் போற்றப்பட்டும் வந்தாலும்,இராணுவத்தில் படைப் பிரிவில் சேர்ந்தது அண்மைக் காலங்களில் தான்.  ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் போரிட வல்லவர்கள் என்ற சிந்தனையினால் அவர்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.  மாறாக, ஆளணிப் பற்றாக்குறையே அதற்கு முக்கிய காரணம்.

ஸ்பெய்ன்நாட்டில் உள்நாட்டுப்போரில் ஆயிரக்கணக்கான பெண்கள்பங்கேற்றார்கள்.இரண்டாம்உலகப்போரில், நூறாயிரக்கணக்கானபிரித்தானிய மற்றும்ஜெர்மன்பெண்கள்விமானஎதிர்ப்புபிரிவுகளில்பணியாற்றினார்கள்.  இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கானஎதிரிவிமானங்களைச்சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.அவர்கள் எதிரிகளின் கைகளில் அகப்படும்ஆபத்துஇல்லாத காரணத்தால், போரில் அவர்கள் ஏற்ற பங்கு பரவலாகஏற்றுக்கொள்ளப்பட்டது. சோவியத்யூனியன் படைகளில், மருத்துவமற்றும்அரசியல்பொறுப்புகளை அதிக பெண்கள் ஏற்றிருந்தார்கள்.  அத்துடன்,பெண்வீரர்கள் மட்டுமே கொண்ட குறிசுடுநர் (sniper) துப்பாக்கிபிரிவுகளையும், பெண்விமானிகளை மட்டுமே கொண்ட விமானப் படைப் பிரிவுகளையும் கொண்ட படைகளை சோவியத்யூனியன் உருவாக்கியிருந்தது.

அவுஸ்திரேலியபடையில் பெண்கள்

ஆளணிப்பற்றாக்குறையைஉணர்ந்தஇன்னொரு அரசு நமது அவுஸ்திரேலியஅரசு. இரண்டாம்உலகப் போருக்குமுன், அவுஸ்திரேலியாவில் இராணுவ மருத்துவ பிரிவில் கடமையாற்றப் பெண்கள்அனுமதிக்கப்பட்டிருந்தாலும், படைப் பிரிவில்சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.  இரண்டாம்உலகப் போர்கடுமையாகிவரும்போது, ஆளணிப்பற்றாக்குறை காரணமாக முதலில்Australian Army Women’s Service என்றும்பின்னர்Australian Women’s Army Service என்றும் ஒரு இராணுவப் பிரிவை அவுஸ்திரேலிய அரசு ஆரம்பித்தது.

அந்தப் படையில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும்இடைப்பட்டஉடல்வலுவுள்ள 29 பெண்கள்மட்டுமேமுதலில்சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.  படைப் பிரிவில்சேர்ந்தாலும்அவர்களதுகடமைகள்அலுவலகவேலையிலும்சமையற்கூடத்திலும்வாகனம்ஓட்டுவதிலும்மட்டுமேஅமைந்திருந்தது.  1942ம்ஆண்டுஜப்பானுடன்போர்உக்கிரமமடைந்தவேளைதான் 12 ஆயிரம்பெண்கள்போரில்உதவிபுரியும்கடமைகளைச்செய்யஅனுமதிக்கப்பட்டார்கள்.

போர்க் காலஅரசு1945ம்ஆண்டுஒருசிறப்புச்சட்டத்தைஅறிமுகப்படுத்தியதைத்தொடர்ந்து, 500 பெண்சிப்பாய்கள்ஆஸ்திரேலியாவிற்குவெளியில்கடமையாற்றஅனுமதிக்கப்பட்டார்கள்.  இரண்டாம்உலகப்போர்முடிவுக்குவரும்வேளை, 24 ஆயிரத்தி 26 பெண்கள்Australian Women’s Army Service என்றஇராணுவஅமைப்பில்கடமையாற்றியிருக்கிறார்கள்.  இந்தஅமைப்பு 1947ம்ஆண்டுகலைக்கப்பட்டது.

2011ம்ஆண்டுதான்பெண்கள்ஆஸ்திரேலியப்படையில்போரில்பங்குகொள்ளலாம்என்றசட்டம்கொண்டுவரப்பட்டது.  அதுபூரணமாகநடைமுறைக்கு வர மேலும் இரண்டுவருடங்கள்பெண் இராணுவ வீரர்கள் காத்திருந்தார்கள்.

மற்றையபடையில் பெண்கள்

பெண்கள்பல்வேறுஇராணுவங்களில் பணியாற்றியுள்ளனர், பணியாற்றி வருகின்றனர் என்ற வரலாற்றை மேற்குலகம் எடுத்துச் சொல்லும் போது, இராணுவ படைப் பிரிவுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளையும் அங்கு நடைமுறையில் இருக்கும் பாலியல்வேறுபாட்டையும் வெளியே சொல்வதில்லை.

1914ஆம் ஆண்டுமுதல், முன்பைவிடஅதிகஎண்ணிக்கையிலும், மாறுபட்டபாத்திரங்களிலும்மேற்கத்தியஇராணுவங்களில் பெண்கள்பணியாற்றியுள்ளனர். 1970களில், பெரும்பாலானமேற்கத்தியபடைகளில்பெண்கள்அனைத்துஇராணுவகிளைகளிலும்கடமையில்பணியாற்றஅனுமதிக்கப்பட்டனர். 2006ஆம்ஆண்டில், எட்டுநாடுகள்பெண்களைஇராணுவசேவையில்சேர்த்தன. 2013ஆம்ஆண்டில், பெண்களைஇராணுவத்தில் சேர்த்துக் கொண்ட முதல் நேட்டோ(NATO) நாடு என்ற பெருமையை நோர்வேபெற்றது.  அத்துடன், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் போது,ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானவிதிமுறைகளைக் கடைப்பிடித்தது.  இதனை அண்டைநாடானஸ்வீடன்2017 ஆம்ஆண்டிலும் ஒல்லாந்து (நெதர்லாந்து)2018ஆம்ஆண்டிலும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன.

போரில் பங்கு கொண்ட தமிழ் பெண்கள்

இராணுவத்தில் அங்கம் வகிக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பற்றிப் பேசும் போது, இலக்கியத்தில் வரும் முறமெடுத்துப் புலி விரட்டிய தமிழ்ப் பெண்ணைப் பற்றிப் பேசி விட்டுப் போக முடியாது.  முறத்துடன் முற்றத்தில் நின்று வேடிக்கை பார்த்த பல தமிழ்ப் பெண்கள் புலிப் பெண்களாக மாறியதும் தமிழர் வரலாற்றில் தான்.  காலத்தின் கட்டாயம் அது.  பாதுகாப்புப் படை என்று இலங்கைத் தீவிற்குச் சென்ற இந்திய இராணுவம் தன் கோர முகத்தைக் காட்டிய பின்னர் தான்,தமிழ்ப் பெண்களுக்கென்று தனியான படையணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பெண்புலிகளின்முதலாவதுபயிற்சிமுகாம்1985ஆம் ஆண்டுஆவணிமாதம் 18ஆம் திகதி, கொடியேற்றித்தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்துவிடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் வரை பல்லாயிரம்தமிழ்ப் பெண்கள்தம்மைப்போராட்டத்தில்இணைத்துக்கொண்டுள்ளதோடுவீரச்சாவைத் தழுவியுமுள்ளார்கள்.

மன்னார்அடம்பனில்சிறீலங்கா இராணுவத்தின்மீதானதாக்குதலோடுபெண் புலிகளின்ஆயுதத் தாக்குதல்வரலாறுஆரம்பித்தது.  இந்தியஇராணுவத்துடன்புலிகளுக்குமோதல்ஏற்பட்டபோதுபெண் புலிகளின்முதலாவதுஉயிர்ப்பலிநிகழ்ந்தது.

கோப்பாய்க்கும்நாவற்குழிக்குமிடையில்நடந்தசண்டையில்லெப்.மாலதிவீர காவியமாகினார். விடுதலைப்புலிகளின்சகலவேலைத்திட்டங்களிலும்படையணிகளிலும்பெண்களும்இடம்பெற்றுள்ளனர். கடல்மற்றும்தரைக்கரும்புலிகளாகவும்பெண் புலிகள்பலர்தம் உயிரைத் துறந்துள்ளர்கள்.

ஆண்போராளிஅணிகளுடன்பெண் போராளிகளின்அணிகளும்கலந்துதாக்குதல்மேற்கொண்டநிலை மாறி, தனித்துத்தாக்குதல்நடத்தும்நிலைக்குவளர்ச்சியடைந்து, மரபு வழிஎதிர்ப்புச்சமர்களில்அவரவர்பகுதிகளைஅவரவரேதனித்துப்பாதுகாத்துச்சண்டைசெய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தார்கள்.

தமக்கெனசிறப்புப்படையணிகளையும்கனரகஆயுதப் படையணிகளையும்கொண்டிருந்த மகளிர்படையணி, தரையில் மட்டுமல்ல கடலிலும்இராணுவ சாகசங்களை செய்துள்ளனர்.ஆண்தலைமையின்றிச்சுயமாகப்பெண்தலைமையில்இயங்கும்இராணுவப் படைகள் வேறெந்த இடத்திலும் இருப்பது அரிது.

இந்தப் பெண்கள் தங்கள் ஆயுதங்களை மௌனித்து நாற்பது மாதங்கள் கழித்துத் தான் (2013 ஜனவரி 24) உலகின் மிகப் பெரிய இராணுவம் என்று சொல்லப்படும் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் போரிட அனுமதிக்கப்பட்டார்கள்.

-எதிரொலிக்காக எழுதியவர் – கவல்கணன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More