இலங்கையினதும் அதன் நேச நாடுகளினதும் அழுத்தத்தை எதிர்நோக்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தனது முடிவை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாகான சபைக்கான தேர்தல் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில் கூட்டமைப்பின் இந்த வெளிப்படையான அறிவிப்பு இலங்கை அரசுக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அனைவரது எதிர்பார்ப்புக்கும் மத்தியில் கூடிய இக்கூட்டத்தில் வேறு என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என வெளியிடப்படவில்லை. கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்நிறுத்தப் போகின்றது என்பதும் இன்னும் முடிவாக வில்லை.