அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற ஒன்று பல புதுமைகளையும் கணக்கற்ற அதிசயங்களையும் நமக்கெல்லாம் தந்திருக்கிறது என்பது அதை முயற்சித்து வென்ற அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . சரி இந்த தேடல் எங்கு தோன்றியது எப்பொழுது எதற்காக என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு சரியான விடை தேடுவதும் ஒரு தேடல்தான் இப்படி ஒரு சாதாரண கேள்வியில் தொடங்கி நாம் எல்லோரும் இன்று அத்தியாயத்துடன் அன்னார்ந்துப் பார்க்கும் பல அரிய கண்டுபிடிப்புகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த தேடல் என்ற ஒரு உந்து சக்திதான்.
பொதுவாக பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது . இதைப் பற்றி நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அப்படிப்பட்ட பாம்புகள் நம் கனவில் வந்தால் நம் எல்லோருக்கும் அன்றைய உறக்கம் ஒரு கனவாகத்தான் மாறிப்போகும் .ஆனால் ஒரு அறிவியல் அறிக்கை சொல்கிறது பாம்பு கனவில் வந்தால் மிகவும் நல்லது என்று நம்புவீர்களா !?
உண்மைதான் நண்பர்களே இன்று உலகத்தில் உயிர் காக்கும் மருந்துகளில் முன்னோடியாக விளங்கும் பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டு பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அதுமட்டும் இல்லை