செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

கோத்தபாய போலவே அனுரவும் இனப்பிரச்சினை இல்லை என்று நடக்கின்றார் | கலாநிதி தயான் ஜயத்திலக்க

2 minutes read

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் மீளெழுச்சி அடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் கூட்டிணைந்து கோரவேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று நாட்டில் தேசிய பிரச்சினையொன்று இல்லையென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பயணிக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக அவர் கூறும் சூழ்ச்சிக்குள் எழுச்சிபெற்றுள்ள தமிழ்க் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னரான சூழலில் வட, கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னரான பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தன.

ஆனால் கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை வட, கிழக்கு மக்கள் தூக்கி எறியச் செய்துரூபவ் தமிழ்க் கட்சிகள் வாக்க வங்கிரீதியாகவும் மக்களின் ஆதரவுத் தளத்திலும் மீளெழுச்சி அடைந்திருக்கின்றன.

மிகக்குறுகிய காலத்தில் தமிழ்க் கட்சிகளின் மீளெழுச்சியானது ஜனநாயகத் தளத்தில் அரியதொரு சாதனையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்துவதில் சுமந்திரன் சாணக்கியன்ரூபவ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன்ரூபவ் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல நீண்டகால அனுபவமிக்க தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பு காத்திரமானது.

தேர்தலுக்கு முன்னதாகரூபவ் இலங்கைரூபவ் இந்திய கூட்டு உரையாடலில் (அநுர-மோடி சந்திப்பு) அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கை மறைந்துபோயுள்ளதை தமிழ்த் தலைவர்கள் நிச்சயமாக அவதானித்திருப்பார்கள். இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு அமைவாக டில்லியால் அந்தவிடயம் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

மறுபுறத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான சீர்திருத்தவாத தீர்வினை முன்வைப்பதற்கு பதிலாக,  போலியான மார்க்சிய வாதத்தினை மீளப்புதிப்பிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளார்.

அனைவருக்கும் சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கின்றன என்ற சிந்தனையையும்ரூபவ் தோல்வியடைந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பேரினவாதப்போக்கில் தேசியப் பிரச்சினையொன்று இல்லையென்ற சிந்தனையையும் அநுர தலைமையிலான அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது.

அதிகாரப்பகிர்வின் ஆரம்பமாக இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான கலக்கெடுவை அறிவிக்காதுரூபவ் சட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினையை தீர்ப்பதற்காக சுமந்திரன் முன்மொழிந்த தனிநபர் பிரேரணையை முன்னகர்த்துவதற்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலைமையானதுர   மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற ஈடுபாடற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

அந்தவகையில் பார்க்கும்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழியிலேயே அநுரகுமாரவும் பயணிக்கின்றமை தெளிவாக புலனாகின்றது. அதுமட்டுமன்றி  இந்தியாவுக்கு மூலோபய இடங்களை வழங்குவதன் ஊடாக அதிகாரப்பகிர்வுரூபவ் தேசியப் பிரச்சினை விடயங்களில் அந்நாடு கொண்டிருந்த நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டாபய-மொரகொட’ சூத்திரத்தினை அநுரவும் பயன்படுத்துகின்றார்.

அவ்வாறான நிலையில் வட, கிழக்கில் எழுச்சி அடைந்துள்ள தமிழ்க் கட்சிகள் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் வழங்க வேண்டும். அதற்கு தென்கின் ஆதரவினையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறில்லாது,  அநுரகுமாரவின் புதிய அரசியலமைப்புச் சூழ்ச்சிக்குள்ளோ,  ஒற்றையாட்சியை நீக்கும் பழைமைவாத கோசத்துக்குள்ளோ சிக்கிக்கொண்டால் அவர்களுக்குள் பிளவுகள் ஏற்படும். அந்தப் பிளவுகள் தமிழ்த் தலைவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்கின்ற பின்னடைவாகவே இருக்கும்.

அதுமட்டுமன்றி, அவர்களின் மீளெழுச்சி வீணாகப்போவதோடு, அதிகாரப்பகிர்வுக்கான நீண்டகால முயற்சிகளும் வீணடிக்கப்பட்டு அரசியல் ரீதியான முடக்க நிலைமையை அநுர அரசாங்கம் ஏற்படுத்திவிடும் ஆபத்தான சூழலே எஞ்சியதாக இருக்கும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.