அனைவருக்கும் வணக்கம். நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான், இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான், தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான்.
பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான். ஆயிரம் தலை முறை வாழ சொத்துக்களும் பணமும் இருந்தும், ஐந்து மணி நேரம் நிம்மதியான உறக்கம் இல்லாமல் தினம் குளிருட்டப்பட்ட அறைக்குள் போலியாய் இரவுகளை நகர்த்துபவனும் இதே மனிதன்தான்.
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற வெறுமையில் வாழ்பவர்கள் சிலர். எதுவும் இல்லாமல் நம்பிக்கை ஒன்று போதும் என்ற பெருமையில் வாழ்பவர்கள் பலர். இப்படி இன்பம், துன்பம், ஆக்கம், அழிவு, வளர்ச்சி, கலை, கட்டுப்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் உருவாக்கியவன் இந்த மனிதன்தான். ஆனால் இவ்வளவு அற்புதங்களை தினமும் நிகழ்த்தி இன்னும் நாம் கற்பனையில் கூட எண்ண இயலாத பல அதிசியங்களை நிகழ்த்த தினமும் அறிவியல் என்ற அதிவேகக் குதிரைகளை ஆவேசமாக ஓட்டிக் கொண்டிருக்கும் இந்த மனிதர்களின் இனம் எப்பொழுது இந்த பூமியில் தோன்றியது யாருக்கேனும் தெரியுமா? என்றுக் கேட்கத் தொடங்கினால் பல ஆயிரம் கற்பனைகளையும், கதைகளையும் பதில்களாக கண்களை மூடிக்கொண்டு வீசும் பலர் நம்மில் இருக்கிறோம்.
அப்படி என்றால் இந்த பூமியில் மனித இனம் எப்படி தோன்றியது என்பது முழுமையாக இதுவரை அறியப்படாவிட்டாலும் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் ஓரளவிற்கு தகுந்த ஆதாரங்களுடன் மனிதனின் உண்மையான் முதல் தோற்றத்தைப் பற்றி நிருபிக்கப் பட்டிருக்கிறது.
இந்த பூமியில் மனிதன் முதலில் எப்படி தோன்றினான் இது ஒரு முடிவற்றக் விவாதம் இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுதும் நாம் இந்த தகவலின் வாயிலாக இந்த மனித இனம் எப்பொழுது தோன்றியது என்பது பற்றி. சில தினங்களுக்கு முன்பு வெளியான மிகப் புதுமையான ஒரு ஆராய்ச்சியின் முடிவுகளின் விவரங்களை சற்று நாமும் தெரிந்துகொள்ளலாம்.
சில வருடங்களாக பல நாடுகளில் இந்த மனித இனம் எப்பொழுது தோன்றியது என்பது பற்றி பல கேள்விகளும், சர்ச்சைகளும் நிகழ்ந்து வருகிறது. அந்த கேள்விக்கு பதில் தேடும் வகையில் பல நூறு ஆராய்சிகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது.இந்த போட்டியில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு அறிந்துகொள்ளும் ஆர்வத்தின் முதல் இடத்தில் இருக்கும் நாடு இங்கிலாந்து. ஆம் இந்த நாட்டில்தான் மனிதன் எப்பொழுது தோன்றினான் என்பது பற்றி அறிந்துகொள்ள பழக குழுக்களை சில வருடங்களுக்கு முன்பு அந்த நாட்டின் அரசு தயார் செய்து பல புதிய ஆராய்சிகளை தொடங்கியது.
அந்தக் குழுக்களும் பல புதுவிதமான முறைகளில் இது பற்றிய ஆராய்சிகளை இதனை வருடங்களாக செய்து இப்பொழுது சில தினங்களுக்கு முன்பு பல திடிக்கிடும் உண்மைகளை வெளியிட்டு இருக்கிறார்களாம்.
இந்த மனித இனம் பற்றிய ஆராய்ச்சியில் இறுதி முடிவை இதே இங்கிலாந்துதான் இரண்டாயிரத்து ஐந்தாம் வருடம் உலகிற்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முடிவில் இப்பொழுது இருக்கும் இந்த மனித இனம் பூமியில் 700000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தெரிவித்து இருந்தது . அதே குழு இப்பொழுது பல புதுவிதமான ஆராய்ச்சியின் முடிவில் இந்த மனித இனம் 950000 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு இருகின்றார்கலாம் . அதுவும் இந்த மனித இனம் வேறு எங்கும் இல்லாமல் முதன் முதலில் இங்கிலாந்தில்தான் தோன்றி இருக்கக்கூடும் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த பத்து வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள நோர்போல்க் கடற்கரையில் இந்த மனித இனம் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியை செய்து வரும் இந்த குழுக்கள். கடல் பகுதியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் தோண்டி இந்த ஆராய்ச்சியை ஒரு புதுவிதமான முறையில் தொடங்கி இருக்கிறார்கள். அப்பொழுது அந்த தோண்டப்பட்டக் கடல் பகுதிகளில் மனிதர்கள் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததற்கான பல அடையாளங்கள் கிடைத்திருகிறது என்றும். அதுமட்டும் அல்லாது.
இன்று நாம் பயன்படுத்தும் கருவிகளைவிட மிகக் கூர்மையான மிகவும் வினோதமான கற்களால் ஆன 78 வெட்டுக்கருவி ஆயுதங்ககளும் கிடைத்ததாம். அதை ஆராய்ந்த தொல்பொருள் வல்லுனர்கள் இந்த கருவிகளும் தடயங்களும் 840,000 அல்லது 950,000 வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டவை என்று உறுதி செய்து இருகிறார்கலாம்.
அது மட்டும் இல்லாது, இன்று இருக்கும் யானைகளைப் போல் பல மடங்கு பெரியதாக கருதப்படும் மாமுத் யானைகளும், செம்மான்களும் 950,000 வருடங்களுக்கு முன்பே பூமியில் தோன்றி வாழ்ந்ததற்கான தடையங்களும் கிடைத்து இருப்பதாக அறிக்கையின் முடிவுகள் தெரிவித்து இருக்கிறார்களாம். இந்தக் குழுவின் கருத்தின்படி இந்த ஆராய்ச்சி தொடர்ந்தால் இன்னும் மனிதன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கை முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை.
இறந்த தனி மனிதனின் நேற்றைய வாழ்க்கையும், இறக்கபோகும் மனிதனின் நாளைய வாழ்க்கையையும் ஆராய்ச்சி செய்யும் இது போன்ற குழுக்கள் இன்று தினமும் வறுமையிலும், சோகத்திலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தினம் நொந்து நொந்து செத்துகொண்டிருக்கும் இந்த நிகழ்காலத்தில் வாழும் மக்களின் மனநிலைப் பற்றி எப்பொழுதுதான் ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை!??????
நன்றி : பனித்துளி சங்கர்