இந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலமாற்றத்தில் தனது பதிவை ஆழமாக நிலை நிறுத்திய பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இவரது 87வது பிறந்தநாள் ஜூன் 24ம் திகதியாகும்.
தமிழ் சினிமாவை சாமானியரும் நெருங்கி ரசிக்க வைத்ததில் கண்ணதாசனின் பாடல்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்துள்ளன. கடின தொழில் செய்யும் உழைப்பாளிகளுக்கு தோழனாய் நின்றது இவரது பாடல்கள், தமிழில் பற்றுக்கொண்டவர்களை பித்துப் பிடிக்கவைத்ததும் இவரது பாடல்கள். ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, ஆண்மிகவாதியாகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய கண்ணதாசனை கவிஞராகவும் பாடலாசிரியராகவுமே உலகம் இவரைப்பார்த்தது.
இவரது சினிமா வாழ்வில் ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டமான சூழலிலே இவருக்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது. எம். ஜி. ஆர், சிவாஜி, கருணாநிதி போன்ற கலைஞர்களுடன் நெருங்கிய நட்பை வைத்திருந்த கண்ணதாசன் இவர்களுடன் இணைந்து சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை நிலைநாட்டியிருந்தார் . திராவிட கொள்கையின் மீது நாட்டம் கொண்ட இவர் அறிஞர் அண்ணாவின் மேல் பேரன்பு வைத்திருந்தார். அரசியலில் நாட்டம் கொண்டு செயல்ப்பட்ட போதும் இவருக்குள் இருந்த கவிஞரால் அரசியலை தொடர்ந்து எதிர்கொள்ள முடியவில்லை. மக்களும் இவரிடமிருந்து பாடல்களையும் பத்தி எழுத்துக்களையும் மட்டுமே எதிர்பார்த்தார்கள்போல்…
கண்ணதாசனுடைய பாடல் வரிகளுக்கு எம். எஸ். விஸ்வநாதனுடைய இசையும் டி. எம். சௌந்தராஜனின் குரலும் அந்த நாட்களில் மிகவும் விரும்பப்பட்டன அது மட்டுமல்ல இவற்றுடன் எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. தத்துவம், காதல், கவலை, மகிழ்ச்சி, பிரிவு, கோவம், விரக்தி, ஆன்மிகம் போன்ற எல்லா மன உணர்வுகளைப்பற்றியும் இவர் பாடல்களாக வடித்திருக்கின்றார்.
காலங்களில் அவள் வசந்தம் கலைகளில் அவள் ஓவியம் என்ற பாடலிலும் சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததெல்லோ மனித ஜாதி என்ற பாடலிலும் ஒவொரு வரிகளையும் சிந்தித்து ரசிக்க வைக்கின்றது. இவ்வாறு இவரது சுமார் 5000 பாடல்கள் இன்று நம்மிடம் உள்ளது ஏன் அவை காலம் காலமாக நிலைத்து நிக்கப்போகின்றன.
நார்த்திகனாக இருந்து பல பாடல்களை தந்தார் பின் ஆன்மிகத்தில் ஈடுபட்டு மேலும் பல பாடல்களைத் தந்தார். அர்த்தமுல்ல இந்துமதம் என்ற புத்தகம் மூலம் இந்துமதம் எவ்வாறு வாழ்க்கைக்கு பயன்படுகின்றது என சொல்வதாகவும் தனது சுயசரிதை நூலான வனவாசத்தில் ஒருவன் எப்படி வாழக்கூடாது என சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆனாலும் பின்நாட்களில் வந்த எத்தனையோ பாடலாசிரியர்களுக்கு கண்ணதாசன் முன்மாதியாக இருந்துள்ளார்.
திரை இசைப்பாடல்களை இலகு தமிழில் தந்து உலகமெங்கும் காற்றுப்போகும் இடமெல்லாம் தனது பாடல் வரிகளை பரவவிட்ட இந்த கவிஞன் பிறந்த இந்த தினத்தில் அவரது நினைவுகளை மீட்டுகின்றோம்.
– சுப்ரம் சுரேஷ் –