புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சிந்து வெளி நாகரிக மாற்றங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 14சிந்து வெளி நாகரிக மாற்றங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 14

சிந்து வெளி நாகரிக மாற்றங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 14சிந்து வெளி நாகரிக மாற்றங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 14

4 minutes read

கால மாற்றம் அனைத்தையுமே மாற்றும் வல்லமை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே.

சிந்து வெளியிலேயே மீண்டும் சங்கங்கள் அமைத்து அவர்கள் பேசிய மொழிக்கு வரிவடிவத்தை உருவாக்கியும் இருக்கலாம். அது தமிழ் மொழியாகவோ அன்றி அதன் ஆரம்ப மொழியாகவோ கூட இருக்கலாம்.

அவர்கள் ஓலைகளிலும் புற்களிலும் எழுதியதாலேயே சிந்துவெளியிலிருந்து அதிக அளவில் செய்திகளைப் பெற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க அதிகளவில் ஆய்வுகள் செய்தால் எங்கே மெசொபோத்தேமியாவுக்கும் சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பு தெரிந்துவிடும் என்பதனாலோ அன்றி மேற்குலகு நன்கு தெரிந்துவைத்திருப்பதாலோ சுமேரியரின் ஆய்வில் காட்டும் ஆர்வத்தை சிந்துவெளியில் காட்டவில்லை. ஆய்வு செய்பவர்களும் கூட சிந்துவெளியில் ஓர் நாகரிகம் தோன்றி வளர்ந்ததாகவே கூறுகின்றனர்.

சிந்துவெளியின் காலம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளே. சிந்துவெளி நாகரிகத்தின் பெருநகரங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியன 200 ஆண்டுகள் மட்டுமே தலை நகராக இருந்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன. ஒரு நாகரீகத்தின் தோற்றம் ஆரம்பிப்பது கற்காலத்திலிருந்து தானே அன்றி ஆற்றங்கரையில் குடியேறி 500 ஆண்டுகளில் உடனேயே நாகரிகம் அடைந்து விட முடியாது என்பதும் சாத்தியம் அற்றதும் ஆகும்.

38_20080609145842.

சிந்துவெளி நாகரிக மாந்தர் மொகஞ்சதாரோவிலோ அல்லது கரப்பாவிலோ எதையும் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. விவசாயம் என்றாலும் சரி, செங்கல் சுடுவது சரி, கட்டடம் கட்டுவதெல்லாம் கூட சிந்து வெளிக்கு வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டனர். நுட்பமான பாலங்கள், பாதுகாப்புச் சுவர்கள்,  நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள், கழிவு நீரை நகரத்துக்கு வெளியே கொண்டு போவதற்கான வாய்க்கால்கள், இப்படி ஒரு நாகரிக வளர்ச்சியுற்ற சமுதாயத்தால் செய்ய முடிந்த அத்தனையையும் அவர்கள் செய்துள்ளனர் எனில் அத்தனையும் 500 ஆண்டுகளில் அதுவும் புதிதாக நாகரிகம் அடைய ஆரம்பிக்கும் இனத்தினால் செய்வது சாத்தியமற்றதே என்பது அனைவருக்கும் விளங்காதென்பது இல்லை.

அத்தோடு சிந்து வெளியிலும் அவர்கள் கோதுமையையும் பார்லியையும் தான் அதிகமாக விளைவித்தும் இருக்கின்றனர்.

wcopot1a4s

சுமேரியரால் வனையப்பட்ட பானைகள் போன்றே இங்கும் பானைகளும் மட்பானங்களும் சிவப்பு கருப்பு நிறத்தில் சுடப்பட்டவையாக இருக்கின்றன. சவக்குழிகள் கூட சிந்துவெளியினதும் மேசொபோத்தேமியாவினதும் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ச்சியாக ஈழம் வரை கால இடைவெளியில் தொடர்கின்றன.

விவசாயத்தின் வளர்ச்சி மெசொபொத்தேமியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் என்னும்போது சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளியில் தொடங்கியிருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது சிந்துவெளியில் அவ்வினத்தவர் இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு கிட்டத்தட்ட அவர்கள் 500 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட கிறித்துவுக்கு முன் 2300 காலப்பகுதியில் மெசொப்பொத்தேமியாவிலிருந்து இடம்பெயர்ந்த சுமேரியர் 1800 களில் சிந்துவெளியை விட்டு மீண்டும் இடம் பெயர்ந்துள்ளனர்.

அதற்கான காரணங்கள், அங்கும் சிந்து நதியின் சீற்றம் மிகக் கடுமையாக இருந்ததனால் அடிக்கடி பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக வறட்சியும் நிலத்தில் உப்பு விளையும் தன்மையும் ஏற்ப்பட்டதனாலும், அவர்கள் தமக்குள் ஏற்கனவே மெசொபொதேமியாவில் ஏற்பட்டிருந்த அனுபவம் காரணமாக சிந்துவெளியை விட்டு இயற்கை மழைவீழ்ச்சி உள்ள இடங்களை சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து இந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

இத்தனை காரணங்களும் அகழ்வாய்வுப் பொருட்களும் சாட்சியாக இருக்க, ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்ப்படுத்தவோ அல்லது நிறுவ முடியாது உள்ளதெனில் அதற்கான உண்மைக் காரணம், அகழ்வாய்வில் ஈடுபடுவோர் ஒன்றில் அடிமுட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது அதி துவேச மனப்பாங்கு உடையவராக இருக்க வேண்டும். ஓரிருவர் நடுநிலை வகிப்பவராக இருக்கும் பட்சத்தில், அரசோ அல்லது தம்மை உயர்வென என்னும் சமுதாயத் தலைவர்களோ அவர்களின் கூற்றை ஏற்க்காதிருப்பதும் மறைப்பதுவுமாகவே இருக்கின்றன.

sumer

அதைவிடக் கொடுமை தமிழர்களே சுய சிந்தனை அற்ற சமுதாயமாக பல்லாண்டுகாலம் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையினால் ஒருவித தாழ்வு மனப்பாங்கும் அவர்களிடம் அழிக்கமுடியாமல் இருப்பதனால், மற்றவர் கூறுவதை மட்டுமே நம்பும் தன்மையும், தமிழர்களிடையே தொல்பொருள் ஆய்வை மேற்கொள்ளும் திறனுடையோர் அதிகம் இல்லாததும், இருப்பவர்களும் சுதந்திரமாக அவ்வாய்வுகளைத் தொடர முடியாத தடைகளுடன் இருப்பதுவும், இதற்கான பொருளாதார வலுவின்மையும், எம்மைப்பற்றி நாமே அறிவதற்குத் தடைகளாக உள்ளதுடன் மேற்குலகுடன் சரிநிகர் நின்று வாதிட்டு நிறுவ முடியாதவர்களாகவும் உள்ளமை தமிழினத்தின் சாபக்கேடே அன்றி வேறென்ன???

தமிழர்களுக்கு மொழிவாரியாகப் பெயர்கள் இருந்தது இல்லை. இடப்பெயர், காரணப்பெயர், உருவப்பெயர் என்பனவற்றாலேயே சுமேரியர் அடையாளைப்படுத்தப் பட்டுள்ளனர். திரவ இடத்தில் வாழ்ந்த மக்கள் என்பதனால் திராவிடர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது சிவகணேசன் அவர்களின் சிந்தனை.

சுமேரியர் இடம்பெயர்ந்து இந்தியப் பெரு நிலப்பரப்புள் வந்தபின் தமிழர் என்னும் பெயர் பெற்றிருக்கலாம். அது பற்றிய தெளிவான பதிலை இன்னும் என்னால் அறிய முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த பின்னரே அரிசியும் அவர்களுக்கு அறிமுகமாயிற்று. அரிசி முதன்முதல் இற்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எம்மில் பலர் அது தமிழர்களுக்குச் சொந்தமானது என எண்ணிக்கொண்டிருக்கின்றோம். புலம் பெயர் நாடுகளில் எம் இளஞ்சமூகம் சோற்றை விடுத்து மேற்குலகின் உணவுகளுக்கு அடிமையாகிப் போயினரோ அதுபோல் புதிதாக அரிசியைக் கண்டவுடன் அரிசிக்கு அடிமையானான் தமிழன். ஆனால் விவசாயத்தை மட்டும் எக்காலத்திலும் விடவே இல்லை. அத்துணை விவசாயம் தமிழனுடன் ஒன்றாக ஊறிப்போனது மட்டுமன்றி விவசாயமின்றி மற்றொன்றும் இல்லை என்னும் நிதர்சனத்தையும் தமிழன் நன்கறிந்திருந்தான் என்பதே பொருந்தும். அதனால்த்தான் இன்றும் பச்சைக் கடவுளுக்காக மெசொபோத்தேமியாவில் கொண்டாடப்பட்டு வந்த இயற்கைக்கான விழா தைப்பொங்கலாக மதபேதமற்ற விழாவாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தோடு சுமேரியர் தமிழர் என்னும் பகுதியை நிறைவுக்குக் கொண்டு வந்து அடுத்த பகுதியில் ஏன் நான் சுமேரியர் தான் தமிழர் என்று கூறுகிறேன் என்பதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

 

 

தொடரும் …

 

 

Nivetha  நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

 

 

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history-6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-10/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-11/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history12/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-13/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More