சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹுபெய் மாநிலத்தில், சென்னூங்சியா என்னும் புகழ்பெற்ற இயற்கைக் காடு உள்ளது. மனித நடமாட்டம் இல்லாததால், இங்குள்ள இயற்கைச் சூழ்நிலை சீராக இருக்கிறது. மேலும், சீனாவின் முக்கிய வன விலங்கு மற்றும் தாவர மூலவளக் கருவூலமாக இக்காடு மாறியுள்ளது. இன்று, இந்த வன பாதுகாப்பு மண்டலம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
கடந்த சில ஆண்டுகளில், இங்கு 4 பெரிய சுற்றுலா காட்சியகங்கள், நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதி்ல, Mu yu வட்டம், பயணிகள் மிகவும் அதிகமாக வருகை தரும் இடமாகும். இவ்வட்டத்தில் பெரும்பாலான நகரவாசிகள், சுற்றுலாவுடன் தொடர்புடைய வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். Mu yu வட்டத்திலுள்ள சென்னூங்சியா மலை பண்ணைத் தோட்டம் என்ற
ஹோட்டலின் உரிமையாளர் Li shi kai கூறியதாவது:
இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, சென்னூங்சியாவின் நிலைமை மேன்மேலும் சீராகியுள்ளது. குறிப்பாக, கோடைக்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகியுள்ளது. இதனால், கடன் வாங்கி, இந்த ஹோட்டலை நடத்துகின்றேன். கடந்த சில ஆண்டுகளில் எங்களின் வருமானம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சியினால், சென்னூங்சியாவின் நகரவாசிகள் அதிக வருமானம் பெறுகின்றனர். ஆனால், பயணிகளின் அதிகரிப்பு, காட்டு மண்டலத்தின் இயற்கைச் சுற்றுச்சூழலுக்கு நிர்பந்தத்தைக் கொண்டு வந்தது. அதேவேளை, சுற்றுச்சூழல், அரிய வன விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைப் பேணிகாப்பதில், உள்ளூர் அரசாங்கம் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து, திரு Qian yuan kun கூறியதாவது:
சென்னூங்சியாவின் பொருளாதார மற்றும் சமூக லட்சிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், நாங்கள் எப்பொழுதும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, முதலிடத்தில் வைத்துள்ளோம். பொருளாதார வளர்ச்சிக்கும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குமிடையிலான முரண்பாட்டை, உரிய முறையில் கையாண்டு வருகின்றோம் என்றார் அவர்.
காட்சி மண்டலத்திலுள்ள 1000க்கு மேலான வகை வன விலங்குகள் ஓய்வு செய்யவும், இயற்கைச் சூற்றுச்சூழலை சீராக சரிப்படுத்தவும், 2006ம் ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் மார்ச் திங்கள் வரை, சென்னூங்சியா காட்டு மண்டலம் தற்காலிகமாக மூடப்பட்டது. சில ஆண்டுகளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் இந்த சரிப்படுத்தல் மூலம், காட்சி மண்டலத்திலுள்ள சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் சீரானது. வன விலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனின் Cambridge பல்கலைக்கழகம், அமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகம், மெக்சிகோவின் தாவரவியல் பூங்கா முதலியவற்றின் நிபுணர்கள் சென்னூங்சியாவைப் பார்வையிட்ட போது, இங்குள்ள பல்வகை உயிரினங்கள், மேம்பட்ட இயற்கைச் சுற்றுச்சூழல், இயற்கையான காடு ஆகியவற்றைப் பாராட்டினர்.
இது குறித்து, திரு Qian yuan kun மேலும் கூறியதாவது:
சென்னூங்சியா காட்டு மண்டலம், பயனுள்ள முறையில் பேணிகாக்கப்பட்டதோடு, அதன் ஈர்ப்பு ஆற்றல் மேன்மேலும் அதிகமாகியுள்ளது. எதிர்காலத்தில், Shen nong jia, அருமையான சுற்றுச்சூழல் கொண்டு, மனிதரும் இயற்கையும் இணக்கமாக இருக்கும் தாயகமாக மாறும் என்றார் அவர்.
நன்றி : கரை செல்வன் | இன்று ஒரு தகவல்